Skip to main content

பிணைக்கைதிகளை பரிமாறிக்கொள்ள ரஷ்யா தயார்: மனித உரிமைகள் ஆணையர் தகவல்!

Mar 23, 2022 78 views Posted By : YarlSri TV
Image

பிணைக்கைதிகளை பரிமாறிக்கொள்ள ரஷ்யா தயார்: மனித உரிமைகள் ஆணையர் தகவல்! 

உக்ரைன் ரஷ்யா போரில் பிணைக்கைதிகளாக பிடிபட்டுள்ள ராணுவ வீரர்களை பரிமாறிக்கொள்ள ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்யாவின் மனித உரிமைகள் ஆணையர் டாட்யானா மொஸ்கல்கோவா தெரிவித்துள்ளார்.



உலகநாடுகளின் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் ரஷ்யா, உக்ரைன் மீதான போரை நான்காவது வாரமாக தொடர்ந்து நடத்தி வருகிறது. இதில் இருநாடுகளும் தங்கள் எதிரிகளின் ராணுவப்படைகளை அழித்து, அவர்களின் ராணுவ வீரர்களை தொடர்ந்து மாறிமாறி கைது செய்து வருகின்றனர்.



இதனிடையே உக்ரைன் ராணுவத்தின் வசம் பிடிபட்ட ரஷ்ய ராணுவ வீரர்களின் செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் வாக்குமூலம் வழங்குவது தொடர்பான வீடியோ ஆதாரங்களை உக்ரைன் அரசு தொடர்ந்து வெளியீட்டு வரும் நிலையில், ரஷ்ய ராணுவத்திடம் பிடிபட்ட உக்ரைன் ராணுவ வீரர்களின்குறித்த எந்தவொரு தகவலும் வெளிவராமல் மர்மமாகவே இருந்து வருகிறது.



இந்தநிலையில், சர்வதேச செஞ்சுலுவை சங்கத்திடம் இருந்து பெறப்பட்ட 500 உக்ரைன் நாட்டு போர் கைதிகளை பற்றிய தரவுகளை ரஷ்யா வெளியிட்டுள்ளது.



மேலும் போரில் பிணைக்கைதிகளாக பிடிபட்டுள்ள ராணுவ வீரர்களை பரிமாறிக்கொள்ளவும் மாஸ்கோ தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.இதுகுறித்து, பேசியுள்ள ரஷ்யாவின் மனித உரிமைகள் ஆணையர் டாட்யானா மொஸ்கல்கோவா உக்ரைனில் பிணைக்கைதிகளாக பிடிபட்டுள்ள ரஷ்யா ராணுவ வீரர்களுக்கு மாற்றாக உக்ரைனின் வீரர்களை பரிமாறி கொள்ள ரஷ்யா தயாராக இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார். 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை