Skip to main content

தமிழ்நாட்டில் விரைவில் கொரோனா 4ஆம் அலை?

Mar 20, 2022 85 views Posted By : YarlSri TV
Image

தமிழ்நாட்டில் விரைவில் கொரோனா 4ஆம் அலை? 

உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.



இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கி 2 ஆண்டுகள் தாண்டிவிட்டதுதற்போதைய சூழலில் கொரோனா தடுப்பூசி மட்டுமே வைரஸ் பாதிப்பைத் தடுக்க ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து நாடுகளும் வேக்சின் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.. இருப்பினும், இப்போது வரை கொரோனா வைரசை எந்த நாடும் முழுமையாக அழிக்கவில்லை.



தடுப்பூசி முகாம்



தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த வேக்சின் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காகவே ஒவ்வொரு வாரமும் தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த வாரம் தமிழ்நாட்டில் 25ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.



இது தொடர்பாகச் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், "தமிழ்நாட்டில் 25ஆவது மெகா தடுப்பூசி முகாமில் மட்டும் 5.53 லட்சம் பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 5.32 கோடி பேருக்கு ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. அதேபோல 4 கோடிக்கும் அதிகமானோருக்கு 2ஆவது டோஸ் கொரோனா வேக்சின் போடப்பட்டு உள்ளது. அதாவது 92% பேருக்குக் குறைந்தது 2 டோஸ் வேக்சினும், 80% பேருக்கு 2 டோஸ் வேக்சினும் போடப்பட்டுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

19 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை