Skip to main content

தாய்வான் எல்லைக்குள் சீறிப்பாய்ந்த 30 சீனபோர் விமானங்கள்

Jun 01, 2022 63 views Posted By : YarlSri TV
Image

தாய்வான் எல்லைக்குள் சீறிப்பாய்ந்த 30 சீனபோர் விமானங்கள் 

தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் அத்துமீறி சீனாவின் 30 போர் விமானங்கள் நுழைந்துள்ளதாக கூறப்படுகின்றது.



அமெரிக்காவுடனான பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக தைவான் சுட்டி காட்டியதால், இந்த ஆண்டு தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் சீனா தனது இரண்டாவது பெரிய ஊடுருவலை செய்துள்ளது.



தைவான் தனது வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் தென்மேற்கு பகுதிக்குள் சீனா அனுப்பிய 30 போர் விமானங்களை எச்சரித்துத் தடுப்பதற்காக தனது போர் விமானங்களை நிறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.



பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய வரைபடத்தின்படி, தைவானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தின் ஒரு பகுதியான பிரதாஸ் தீவுகளின் வட கிழக்கே ஒரு பகுதியில் சீன விமானம் பறந்தது.



சமீபத்திய ஊடுருவலில் 22 போர் விமானங்கள், மின்னணு போர்முறைக்கான கருவிகள், நீர்மூழ்கி எதிர்ப்பு விமானங்கள் ஆகியவை பங்கேற்றதாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.



அதேவேளை தைவான் மீது சீனா படையெடுக்கக் கூடாது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்  (Joe Biden)சீனாவை எச்சரித்த சில நாட்களுக்குப் பிறகு இது நடந்துள்ளது.



அதே நாளில் அமெரிக்க அதிகாரி ஒருவர் தைவான் தலைவர்களுடன் பாதுகாப்பு குறித்துக் கலந்தாலோசிக்க அந்நாட்டிற்கு சென்று உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.     


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை