Skip to main content

ஈராக்கில் பரவியது மூக்கில் ரத்தம் வடியும் காய்ச்சல்

Jun 01, 2022 60 views Posted By : YarlSri TV
Image

ஈராக்கில் பரவியது மூக்கில் ரத்தம் வடியும் காய்ச்சல் 

ஈராக்கில், மூக்கில் இருந்து ரத்தம் கசியும் புதிய காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



கிராமப்புறங்களில் வேகமாகப் பரவி வரும் இந்நோய்க்கு கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் என்று பெயர். சுமார் 43 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்ட இந்த காய்ச்சல் வேகமாக பரவியது, பாதிக்கப்பட்ட 111 பேரில் 19 பேர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.



மூக்கில் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாகவும், இதில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஐவரில் இருவர் உயிரிழப்பதாகவும் கூறப்படுகிறது.



ஒரு வகை உண்ணி தாக்குதலுக்கு ஆளாகும் கால்நடைகள் இறைச்சிக்காக வெட்டப்படும் போது மனிதர்களுக்கு காய்ச்சல் பரவுவதாக கூறப்படுகிறது. இந்த காய்ச்சலுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை