Skip to main content

யுக்ரைனுக்காக போரிடும் பிரிட்டன் எம்.பி.யின் மகன்! குற்றம் சுமத்தும் ரஷ்யா

May 31, 2022 76 views Posted By : YarlSri TV
Image

யுக்ரைனுக்காக போரிடும் பிரிட்டன் எம்.பி.யின் மகன்! குற்றம் சுமத்தும் ரஷ்யா 

யுக்ரைனில் ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக போரிட்டதற்காக பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் ஹெலன் கிராண்டின் (MP Helen Grant) மகனான பென் கிராண்ட்  (Ben Grant) மீது குற்றவியல் வழக்கைத் ஆரம்பிபத்துள்ளதாக ரஷ்ய நீதித்துறை தெரிவித்துள்ளது.



கூலிப்படை மீதான குற்றவியல் வழக்கின் கட்டமைப்பிற்குள், பிரிட்டனை சேர்ந்த பென் கிராண்ட் (Ben Grant) , யுக்ரைனுக்காக ஆற்றிய பங்கை ரஷ்ய புலனாய்வாளர்கள் தீர்மானிக்கின்றதாக ரஷ்ய விசாரணைக் குழு அறிவித்துள்ளது.



பல நாடுகளைப் போலவே ரஷ்யாவிலும் கூலிப்படையானது ஒரு கிரிமினல் குற்றமாகும். அதன் கீழ், கிராண்டிற்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனவும் கூறப்படுகின்றது.



பிரிட்டனின் கடற்படையான ரோயல் மரைன்களில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர் பென் கிரான்ட் (Ben Grant).



யுக்ரைனுக்காக போரிடும்  பிரிட்டன் எம்.பி.யின் மகன்!  குற்றம் சுமத்தும் ரஷ்யா



கடந்த மார்ச் முதல், அவர் யுக்ரைனின் பக்கம் போரிட்டதற்காக பிரிட்டன் ஊடகங்களில் ஹீரோவாகப் பென் கிராண்ட் (Ben Grant)  போற்றப்படுகிறார். அவரது போர் நடவடிக்கைகள் குறித்து பிரிட்டன் பத்திரிகைகள் அடிக்கடி செய்தி வெளியிடுகின்றன.



இந்நிலையில் பென் கிராண்ட்  (Ben Grant) அண்மையில் தீயில் காயம்பட்ட ஒரு வீரரின் உயிரைக் காப்பாற்றி அவரை போர்க்களத்தில் இருந்து தூக்கிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை