Skip to main content

உக்ரைனின் முக்கிய பகுதிக்குள் புகுந்த ரஷ்ய துருப்புகள்:

May 31, 2022 54 views Posted By : YarlSri TV
Image

உக்ரைனின் முக்கிய பகுதிக்குள் புகுந்த ரஷ்ய துருப்புகள்: 

உக்ரைனில் உக்கிர தாக்குதலை முன்னெடுத்துவரும் ரஷ்ய துருப்புகள் Sievierodonetsk நகரில் புகுந்துள்ள நிலையில், இன்னொரு மரியுபோலாக மாறிவிடும் அபாயம் இருப்பதாக நகர மேயர் கவலை தெரிவித்துள்ளார்.



உக்ரைனின் Sievierodonetsk நகரில் தொலைத்தொடர்பு மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மொத்தமாக சிதைக்கப்பட்டுள்ளதாக நகர மேயர் குறிப்பிட்டுள்ளார்.



உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் அமைந்துள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் கைப்பற்ற ரஷ்யா முயல்வதாகவும், அதற்கு முதற்படியாக Sievierodonetsk நகரை கைப்பற்றுவது முக்கியம் என ரஷ்ய துருப்புகள் செயல்பட்டு வருவாதாக கூறப்படுகிறது.



இருப்பினும் உக்ரைன் துருப்புகள் கடுமையாக போரிட்டு வருவதாகவும் நகர மேயர் தெரிவித்துள்ளார். ஆனால் ரஷ்ய துருப்புகள் நகருக்குள் நுழைந்துள்ளது உண்மை எனவும், உக்கிர தாக்குதல் முன்னெடுப்பதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.



உக்ரைனின் முக்கிய பகுதிக்குள் புகுந்த ரஷ்ய துருப்புகள்: நகர மேயர் தகவல்



 



மேலும், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அப்பாவி மக்கள் ரஷ்ய துருப்புகளால் பலியாவதாகவும், எண்ணிக்கை வெளியிட முடியாத நிலை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



ஒருகட்டத்தில் 100,000 அப்பாவி மக்கள் நகருக்குள் சுரங்க அறைகளில் சிக்கியிருந்த மக்கள் வெளியேறிய நிலையில், தற்போது 12,000 அல்லது 13,000 பேர்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



Sievierodonetsk நகரம் ரஷ்ய துருப்புகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதை ஜனாதிபதி ஜெலென்ஸ்கியும் உறுதி செய்துள்ளதுடன், நிலைமை மிக மோசமாக உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை