Skip to main content

சீனாவின் யுனான் மாகாணத்திற்கும் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு!

May 27, 2022 70 views Posted By : YarlSri TV
Image

சீனாவின் யுனான் மாகாணத்திற்கும் தமிழர்களுக்கும் என்ன தொடர்பு! 

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு சினாவினால் வழங்கி வைக்கப்பட்ட நிவாரண பொருட்கள் கொடுக்கப்பட்டிருந்தது. குறித்த நிவாரணப் பொதிகள் சீனாவின் யுனான் மாகாணத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டிருந்தது.



இந்நிலையில் சீனாவின் யுனான் மாகாணத்தில் வாழும் மக்களுக்கும், இலங்கை இந்திய தமிழர்களின் வாழ்வியலும் ஒன்றோடொன்று ஒத்துபோவதாக கூறப்படுகின்றது. இது குறித்து முகநூல் வாசி ஒருவர் பதிவிடுகையில்,



சீனாவின் யுனான் மாகாணத்து மக்களின் வாழ்க்கை முறை இலங்கை இந்திய தமிழர்களின் வாழ்க்கை முறையோடு ஒத்துப் போவதை பார்த்திருக்கிறேன். முழு சீனாவும் பெப்ருவரியில் புத்தாண்டை கொண்டாடும் போது இவர்கள் ஏப்ரல் 13 இல் கொண்டாடுவார்கள். இங்குள்ள பெண்கள் விஷேட தினங்களில் பட்டால் ஆன பாவாடை சட்டைக்கு ஒத்த உடைகளை அணிவதை பார்த்திருக்கிறேன்.



முக்கியமாக வீதிகளில் விநாயகரின் சிலைகளை காண முடியும். விழாக்களில் கும்மி கோலாட்டம் ஆடுவதையும் பார்த்திருக்கிறேன் . வாழை மரமும் இவர்களின் வாழ்வும் பிரிக்க முடியாதது.



நன்றாக எம்மைப் போலவே உறைப்பு சாப்பிடுவார்கள். இன்னும் நிறைய. ஆகவே இவளவு பெரிய சீனாவில் இந்த யுனான் மாகாணத்து மக்கள் விசேடமாக உதவி புரிய ஏதோ ஒரு பிணைப்பு எம்முள் காணப்படலாம்.



இன்று கீழடியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் சுவடுகள் காணப் படுவதை போன்று யுனான் மாகாணத்து குகையில் பல்லாயிரம். ஆண்டுகளுக்கு முன் குகை மனிதர்கள் வாழ்ந்த சுவடுகளை சென்று பார்த்திருக்கிறேன் ஒரு வேளை அவர்களுக்கும் எமக்கும் இடையே அதிக தொடர்பு இருந்திருக்குமோ எனவும் அவர் பதிவிட்டுள்ளார்



 



Gallery Gallery


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை