Skip to main content

இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம்! இலங்கைக்கு மேலுமொரு நெருக்கடி

May 21, 2022 73 views Posted By : YarlSri TV
Image

இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம்! இலங்கைக்கு மேலுமொரு நெருக்கடி 

இலங்கை வசமுள்ள படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, காரைக்கால் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்று எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 2018 ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை வசம் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப் படகுகளை உடனடியாக மீட்டு தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், உற்பத்தி விலையில் டீசல் வழங்க வேண்டும், தமிழக அரசால் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசலை உயர்த்தி வழங்க வேண்டும், மக்களவை உறுப்பினராக மீனவ சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை அரசியல் கட்சிகள் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம்!  இலங்கைக்கு மேலுமொரு நெருக்கடி



 



இன்று காலை தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டம் நாளை மாலை வரை நடைபெறும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.



மேலும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அரசுடமையாக்கப்பட்ட விசைப்படகின் உரிமையாளர்கள்; மற்றும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.





இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந் நிலையில் இலங்கை அரசாங்கம் கைப்பற்றிய ஒரு தொகை படகுகளை ஏலத்தில் விற்பனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 



இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம்!  இலங்கைக்கு மேலுமொரு நெருக்கடி


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை