Skip to main content

அவசியமின்றி இலங்கைக்கு செல்ல வேண்டாம்:சிங்கப்பூர்

May 12, 2022 79 views Posted By : YarlSri TV
Image

அவசியமின்றி இலங்கைக்கு செல்ல வேண்டாம்:சிங்கப்பூர் 

இலங்கையில் மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலைமையில், இலங்கைக்கான அனைத்து அத்தியாவசியமற்ற பயணங்களையும் ஒத்திவைக்குமாறு சிங்கப்பூர் மக்களுக்கு அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு இன்று அறிவித்துள்ளது.



இலங்கையில் இருக்கும் சிங்கப்பூர் குடிமக்கள் விழிப்புடன் இருக்கவும், அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.



இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இலங்கை பொதுமக்களின் இந்த கோபம் வன்முறையாக வெடித்துள்ளது.



இதன் காரணமாக இலங்கை முழுவதும் நடந்த வன்முறை சம்பவங்களில் இரண்டு பொலிஸார் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் மற்றும் 136 வீடுகள் சேதமடைந்துள்ளன.



இந்த நிலைமையில் எதிர்ப்புக்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களைத் தவிர்க்குமாறு இலங்கையில் உள்ள சிங்கப்பூர் குடிமக்களை அறிவுறுத்துவதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.





இலங்கையில் இருக்கும் சிங்கப்பூர் மக்கள் அந்நாட்டின் செய்திகளை உன்னிப்பாகக் கண்காணித்து இலங்கை அதிகாரிகளின் அறிவித்தல்களுக்கு அமைய செயற்பட வேண்டும்.



இலங்கைக்கு பயணம் செய்யும் சிங்கப்பூர் மக்கள் பயண காப்புறுதிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் விதிமுறைகள் மற்றும் முழு உள்ளடங்களை பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.



இலங்கையில் உள்ள சிங்கப்பூர் மக்கள் இதனை முன்னதாக மேற்கொள்ளவில்லை என்றால், உடனடியாக தம்மை சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சில் மீண்டும் பதிவு செய்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





உடனடியான தூதரக உதவி தேவைப்படுவோர் +94-11-5577300, +94-11-2304444, +94-11-5577111 ஆகிய இலக்கங்கள் ஊடாக கொழும்பில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது nawaloka slt.lk”>nawaloka@slt.lk என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் எனவும் சிங்கப்பபூர் வெளிவிவகார அமைச்சு அறிித்துள்ளது.



மேலும் சிங்கப்பூர்வாசிகள் 24 மணிநேரமும் வெளிவிவகார அமைச்சில் கடமையில் இருக்கும் அதிகாரியை +65 6379 8800/8855 என்ற இலக்கத்தின் ஊடாக தொடர்புக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை