Skip to main content

நிலத்தடியில் தங்கியுள்ள 1000 பொதுமக்களை மீட்கும் பணிகள் ஆரம்பம்!

May 02, 2022 68 views Posted By : YarlSri TV
Image

நிலத்தடியில் தங்கியுள்ள 1000 பொதுமக்களை மீட்கும் பணிகள் ஆரம்பம்! 

உக்ரைனின் தெற்கு நகரமான மரியுபோலில் இரும்புத் தொழிற்சாலையில் சிக்கியுள்ள பொதுமக்களை வெளியேற்றும் நடவடிக்கை நடைபெற்று வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.



இதில் சுமார் 100 பேர் இன்று திங்கட்கிழமை சபோரிஜியா நகருக்கு வரவுள்ளதாக உக்ரைனிய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.



ஏற்கனவே தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய சிலர், கிழக்கு உக்ரைனின் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு மாற்றப்பட்டனர்.





இந்தநிலையில் கடந்த இரண்டு மாத காலமாக இருளில் வாழ்ந்ததாக பெண் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.



போர் காரணமாக சுமார் 1,000 பொதுமக்கள் நிலத்தடி சுரங்கப்பாதைகள் மற்றும் தங்குமிடங்களின் பரந்த வலையமைப்பில் தஞ்சமடைந்துள்ளனர்,





அத்துடன்; உணவு மற்றும் நீர் விநியோகம் குறைந்து வரும் நிலையில் அவர்களின் நிலைமைகள் குறித்து கரிசனை அதிகரித்து வருகின்றது.




Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை