Skip to main content

மரியுபோலை விட்டு வெளியேற ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் - ஐநாவுக்கு உக்ரைன் வலியுறுத்தல்

Apr 26, 2022 60 views Posted By : YarlSri TV
Image

மரியுபோலை விட்டு வெளியேற ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் - ஐநாவுக்கு உக்ரைன் வலியுறுத்தல் 

ரஷியாவின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன் படையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அமெரிக்கா, தற்போது உக்ரைனுக்கு 165 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்க ஒப்புதல் அளித்துள்ளது.



உக்ரைனுடன் அமைதிப் பேச்சுக்கள் தொடரும். அதே நேரத்தில் மூன்றாம் உலகப் போரின் "உண்மையான" ஆபத்து உள்ளது என ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் எச்சரித்தார்.



ரஷிய செய்தி நிறுவனங்களிடம் பேசிய அவர், நல்ல எண்ணத்திற்கு அதன் வரம்புகள் உள்ளன. ஆனால் அது பரஸ்பரமாக இல்லாவிட்டால் அது பேச்சுவார்த்தை செயல்முறைக்கு உதவாது என தெரிவித்தார். 



உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலை ரஷிய ராணுவம் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறது. இந்நிலையில் முற்றுகையிட்டுள்ள மரியுபோல் துறைமுகத்தை விட்டு வெளியேற ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஐ.நா. பொது செயலாளர் ஆண்டோனியோ குட்டரெசுக்கு உக்ரைனின் வெளியுறவுத்துறை மந்திரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை