Skip to main content

ரஷ்ய அதிபரின் சொத்துக்கள் முடக்கம் - ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

Feb 26, 2022 73 views Posted By : YarlSri TV
Image

ரஷ்ய அதிபரின் சொத்துக்கள் முடக்கம் - ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்! 

ரஷ்ய அதிபரின் சொத்துக்கள் முடக்க ஐரோப்பிய யூனியன் ஒப்புதல் அளித்துள்ளது.



உக்ரைனுக்கு எதிராக  ரஷ்ய படைகள் கடந்த இரண்டு நாட்களாக ஒரு தாக்குதல் நடத்தி வருகிறது. தரைவழித் தாக்குதல் ,வான்வழித் தாக்குதல், கடல்வழி தாக்குதல் என பல்வேறு தாக்குதல்களின் மூலம் வான் வழி கட்டமைப்புகள் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வரப்பட்டுள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. அதேசமயம் உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்ய ராணுவம் மீது நடத்திய தாக்குதலில் 1000 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாகவும் , ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் படைகள் தீவிரமாக போராடி வருவதாகவும் கூறப்படுகிறது.



அத்துடன் போரை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு ரஷ்ய அதிபர் புடினிற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்.  அதேசமயம் உக்ரைனில் அதிகாரத்தை கைப்பற்றுங்கள்  என்று அந்நாட்டு ராணுவ படையினருக்கு ரஷ்ய அதிபர் புடின் அறிவுறுத்தியுள்ளார். இதன்மூலம் போரை சுமுகமாக முடியும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். ரஷ்யாவின் மோசமான தாக்குதலுக்கு ஆளாகியுள்ள உக்ரைனுக்கு ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகள் உதவி செய்ய முன்வந்துள்ளன.



இந்நிலையில் விளாடிமிர் புடின் மற்றும் அவரது வெளியுறவுத்துறை அமைச்சர்  செர்ஜி லாவ்ரோவ் ஆகியோரின்  ஐரோப்பா சொத்துகளை முடக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. 27  நாடுகளை சேர்ந்த ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர்களின் விவாதத்தின் முடிவில் இவ்வாறு நடவடிக்கை எடுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அவர்களுக்கு உள்ள சொத்துக்கள் முடக்கப்படும் என்றும்  ரஷ்யாவின் நிதி ,ஆற்றல், ஏற்றுமதி துறைகள் மீது புதிய தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை