Skip to main content

உக்ரைனின் இன்றைய நிலைக்கு அமெரிக்க காரணமா? முகநூலில் கேள்வி எழுப்பிய நபர்

Feb 25, 2022 102 views Posted By : YarlSri TV
Image

உக்ரைனின் இன்றைய நிலைக்கு அமெரிக்க காரணமா? முகநூலில் கேள்வி எழுப்பிய நபர் 

1990 ஆம் ஆண்டு சோவியத்தை தகர்த்தவர்கள் தங்கள் கனவு நிறைவேறாததன் விளைவே இன்று உக்ரைனில் இடம்பெரும் யுத்தத்திற்கான காரணம் என முகநூலில் Balasingam Sugumar என்ற நபர் பதிவிட்டுள்ளார்.



இந்த பதிவில் அவர் குறிப்பிட்டதாவது,



தங்களுக்கு சவால் விட யாரும் இருக்கக் கூடாது என்ற நோக்கிலேயே சோவியத் ஒன்றியம் சிதறடிக்கப்பட்டது. ரஷ்யாவில் வேர் விட்ட இடதுசாரிச் சிந்தனை முற்றிலும் அழிந்து விடவில்லை என்பது யதார்த்தம்.



விளாதிமிர் பூட்டின் முதலாளித்துவ முகம் கொண்டவர்தான் ஆனால் அமரிக்காவுக்கு அடிமைச் சாசனம் எழுதியவரல்ல. இன்றைய உலகில் மேற்கத்தைய ஏகாதிபத்தியவாதிகளுக்கு சவால் விடக் கூடிய ஒரே தலைவர் விளாதிமிர் பூட்டின் (Vladimir Putin)அவர்கள்தான்.



இதில் பகடைக் காயாய் உக்ரைன். யுத்தம் இல்லாத பூமி வேண்டும் இதுதான் நம் எல்லோரது விருப்பமும். ஆனால் பொய் கூறி ஈராக்கில் தலையிட்டு அந்த நாட்டை சின்னாபின்னப் படுத்தியவர்கள் யார். லிபியாவை பந்தாடியவர்கள் யார். இவற்றுக்கான விடையை யார் தருவார். 



அமெரிக்கா தன் இராணுவ நலன்களுக்காக உக்ரைனை பயன்படுத்த முயற்சித்ததன் விளைவே இன்றைய யுத்த சூழ் நிலைக்கான காரணம் என பாலசிங்கம் சுகுமார் என்ற நபர் முகநூலில் இந்த கருத்தை பதிவிட்டுள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

4 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

4 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

4 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

4 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

4 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

4 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை