Skip to main content

ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளவும் தயார்! அறிவிப்பு விடுத்தது ஐக்கிய மக்கள் சக்தி!...

Feb 15, 2022 51 views Posted By : YarlSri TV
Image

ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளவும் தயார்! அறிவிப்பு விடுத்தது ஐக்கிய மக்கள் சக்தி!... 

அரசு, ஜனாதிபதித் தேர்தலை நடத்தினால்கூட அதனை எதிர்கொள்வதற்கு பிரதான எதிர்க்கட்சி தயாராகவே இருக்கின்றது. எனவே, தேர்தலை பிற்போடாமல் உரிய காலத்தில் நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.



எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,



எந்நேரத்திலும் தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆக, முடிந்தால் தேர்தலை நடத்துமாறு அரசுக்கு நாம் சவால் விடுக்கின்றோம். தேர்தலை சந்திக்க அச்சமில்லையெனில் எதற்காக உள்ளாட்சிமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படவேண்டும்.



அதேபோல சிறு சட்டத்திருத்தம் ஊடாக மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம். அதையும் அரசு செய்யாமல் இருப்பது ஏன்? அரசமைப்பின் பிரகாரம் அடுத்த வருடம் நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களை ஜனாதிபதிக்கு நடத்த முடியும். அவ்வாறு நடத்தப்பட்டால் அந்த தேர்தல்களையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவே இருக்கின்றது.



ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு இல்லை. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அரசுக்கு எதிரான ஆட்டத்தை ஓரணியாகவே எதிர்கொள்வோம். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவே எமது ஜனாதிபதி வேட்பாளர்.” – என்றார்.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை