Skip to main content

இலங்கையில் முட்டை விலை 50 ரூபாய் வரை அதிகரிக்கும் அபாயம்

Feb 10, 2022 82 views Posted By : YarlSri TV
Image

இலங்கையில் முட்டை விலை 50 ரூபாய் வரை அதிகரிக்கும் அபாயம் 

கால்நடை தீவனத்திக் விலை உயர்வால் முட்டை உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் எச்.எம். பி. ஆர். அழகோன் குறிப்பிடுகிறார்.



அரிசி, சோயா, மக்காச்சோளம் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளதுடன் கால்நடை தீவன மூட்டை 3,000 ரூபாயில் இருந்து 6,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.



நாட்டில் தினசரி நுகர்வு செய்யப்படும் எட்டு இலட்சம் முட்டைகளில் கிட்டத்தட்ட 65 இலட்சம் வடமேல் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுவதுடன் அந்த மாகாணத்தில் சுமார் 400,000 விவசாயிகள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.



எப்படியிருப்பினும், ஒரு முட்டையின் உற்பத்தி செலவை ஒப்பிடுகையில், தற்போதைய சந்தை விலையில் முட்டைகளை விற்க இன்னும் முடியவில்லை. தொழிலைத் தக்கவைக்க முடியாமல், சுமார் 20 சதவீத உற்பத்தியாளர்கள் இத்தொழிலை விட்டு வெளியேறிவிட்டனர்.



எப்படியிருப்பினும் இது தொடர்பில் அதிகாரிகள் தலையிடவில்லை என்றால் முட்டை உற்பத்தியில் ஈடுபடும் சிலர் அந்த தொழிலை விட்டு வெளியேறிவிடுவார்கள்.



அதற்கமைய எதிர்வரும் நாட்களில் முட்டை ஒன்றின் விலை 50 ரூபாயை விடவும் அதிகமாக அதிகரிப்பதனை தடுக்க முடியாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை