Skip to main content

“பாகிஸ்தானை நோக்கி ஏவப்பட்ட இந்திய ஏவுகணை”- சர்வதேச விசாரணையை கோரும் பாகிஸ்தான்!

Mar 13, 2022 138 views Posted By : YarlSri TV
Image

“பாகிஸ்தானை நோக்கி ஏவப்பட்ட இந்திய ஏவுகணை”- சர்வதேச விசாரணையை கோரும் பாகிஸ்தான்! 

இந்தியாவினால், தமது எல்லைப்பகுதியை தற்செயலாக ஏவப்பட்டதாக கூறப்பட்ட ஏவுகணை தொடர்பாக கூட்டு விசாரணைக்கு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.



இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் இந்தியா, உள்ளக விசாரணையை மேற்கொள்ளப்போவதாக கூறியிருப்பதை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.



மாற்றாக இந்த விசாரணையில் சர்வதேச சமூகத்தின் பங்கையும் பாகிஸ்தான் கோரியுள்ளது



இந்திய அதிகாரிகள் வழங்கும் எளிமையான விளக்கத்தால் இதுபோன்ற தீவிரமான விடயத்தை தீர்க்க முடியாது என்று பாகிஸ்தானின் வெளியுறவு அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.



எனவே இந்தச் சம்பவத்தின் உண்மைகளை துல்லியமாக தெரிந்துக்கொள்ள ஒரு கூட்டு விசாரணை அவசியம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு;ள்ளது.



வழக்கமான பராமரிப்பின் போது தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக இந்த வாரம் தற்செயலாக பாகிஸ்தானை நோக்கி ஏவுகணை ஒன்று ஏவப்பட்டதாக இந்தியா கடந்த வெள்ளிக்கிழமையன்று தெரிவித்திருந்தது.



கடந்த 9ம் திகதியன்று இடம்பெற்ற இந்த சம்பவத்தின்போது இந்தியாவின் ஏவுகணை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 500 கிலோமீற்றர் தெற்கில் அமைந்துள்ள மியான் சானு என்ற இடத்தில் வீழ்ந்தது. ஆயுதங்கள் அற்ற இந்த ஏவுகணை இந்தியாவும் ரஸ்யாவும் இணைந்து தயாரித்த பிரம்மோஸ் ஏவுகணையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.



எனினும் சம்பவத்தினால் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை. எனினும் இது விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்த பாகிஸ்தான், அது தொடர்பில் ராஜதந்திர எதிர்ப்பையும் வெளியிட்டது,



தற்செயலான ஏவுகணை ஏவுதலைத் தடுப்பதற்கான அதன் பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் அதன் ஆயுதப்படைகளால் அது சரியான முறையில் கையாளப்பட்டதா என்பது குறித்து இந்தியாவிடம் பாகிஸ்தான் விளக்கம் கோரியுள்ளது.



சர்ச்சைக்குரிய காஸ்மீர் பகுதியில் மூன்று போர்களில் ஈடுபட்டு பல சிறிய ஆயுத மோதல்களில் ஈடுபட்ட இந்தியா- பாகிஸ்தான் என்ற இந்த அணு ஆயுதங்களை கொண்ட அண்டை நாடுகளால் விபத்துக்கள் அல்லது தவறான சம்பவங்கள் ஏற்படும் அபாயம் குறித்து ஏற்கனவே இராணுவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்து வந்துள்ளனர்.



அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஆயுதக் கட்டுப்பாட்டு சங்கத்தின் கூற்றுப்படி, இந்தியாவின் ஏவுகணை வீச்சு திறன், சுமார் 500 கிலோமீற்றர் அப்பால் உள்ள பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தை தாக்கும் திறன் கொண்டது. 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை