Skip to main content

உக்ரைனில் மரணத்துக்கு பின்னர் உயர் கௌரவமளிக்கப்பட்ட முதல் இராணுவப்பெண்!

Mar 13, 2022 87 views Posted By : YarlSri TV
Image

உக்ரைனில் மரணத்துக்கு பின்னர் உயர் கௌரவமளிக்கப்பட்ட முதல் இராணுவப்பெண்! 

உக்ரைனின் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய கௌரவ விருதான 'ஹீரோ ஒஃப் உக்ரைன்' பட்டத்தை எட்டு இராணுவ வீரர்களுக்கு வழங்க உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமர் ஸெலென்ஸ்கி அனுமதியளித்துள்ளார்.



இதில் போர் மருத்துவரான சார்ஜென்ட் டெருசோவா இன்னா நிகோலேவ்னாவும் உள்ளடங்குகிறார்.



மரணத்திற்குப் பின் உக்ரைனில் இந்த பட்டம் வழங்கப்பட்ட முதல் பெண்மணி இவர் என்று அறியப்படுகிறது.



போர் மருத்துவரான சார்ஜென்ட் டெருசோவா இன்னா நிகோலேவ்னா, சுமியில் ரஸ்ய படையினரின் தாக்குதலின்போது, பத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் இராணுவ வீரர்களை தன் உயிரைப் பணயம் வைத்து காப்பாற்றினார் என்று ஜனாதிபதி ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.எனினும் ரஸ்ய துருப்புக்களின் பீரங்கித் தாக்குதலால் அவர் மரணமானார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை