Skip to main content

ரஷ்யா மீதான தடை; உலகமெங்கும் உணவு தட்டுப்பாடு ஏற்படும்; புதின் விடுத்த எச்சரிக்கை!

Mar 12, 2022 79 views Posted By : YarlSri TV
Image

ரஷ்யா மீதான தடை; உலகமெங்கும் உணவு தட்டுப்பாடு ஏற்படும்; புதின் விடுத்த எச்சரிக்கை! 

  உக்ரைன் மீதான ரஷ்யாவின் மிலேச்சத்தனமான தாக்குதலினால் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.



சமீபத்தில் ரஷ்யாவின் மசகு எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா அதிரடியாக தடை விதித்தது. அதுமட்டுமாலாது பல்வேறு நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்களது சேவைகளை நிறுத்தி உள்ளன.



இந்த நிலையில் தனது நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடை குறித்து கருத்து தெரிவித்த ரஷ்ய ஜனாதிபதி புட்டின் (Vladimir Putin),



 ரஷ்யா உலகின் முக்கிய உர உற்பத்தியாளர் களில் ஒன்றாகும். இது உலகளாவிய விநியோக சங்கிலிக்கு மிகவும் அவசியம். ரஷ்யாவுக்கு எதிரான மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்திவிடும். இதனால் உலகளவில் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயரும் என எச்சரித்துள்ளார். 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை