Skip to main content

நொடியில் ஏற்படும் இதய நோயை அடித்து விரட்டு சக்திவாய்ந்த உணவு.... 10 நிமிடத்தில் ரெடி!

Mar 11, 2022 61 views Posted By : YarlSri TV
Image

நொடியில் ஏற்படும் இதய நோயை அடித்து விரட்டு சக்திவாய்ந்த உணவு.... 10 நிமிடத்தில் ரெடி! 

இதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.



எனவே இந்த வகையான கொடிய இதய நோயிலிருந்து வருமுன் காத்தலே நல்லது.



 இதய நோயாளிகளுக்கு, அவர்களுக்கு ஏற்படடுள்ள நோயைக் குணப்படுத்துவதற்கான பல்வேறு சிகிச்சைகளும், மருந்துகளும் உள்ளன.



இதய நோய்களைக் குணப்படுத்த எத்தனைவிதமான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கின்றன. ஒரு சில மருந்துகள் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன. என்ன தான் மருந்து மாத்திரைகள் இருந்தாலும் எம் பாரம் பரிய உணவுகளுக்கு நோயை குணப்படுத்தும் சக்தி உண்டு.



அப்படியான சக்திவாய்ந்த உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ன வேண்டும்.



இதய நோய் வராமல் தடுக்கும் எள்ளுப் பொடி செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.



தேவையான பொருள்கள்




  1. எள் - 100 கிராம்

  2. மிளகாய் வத்தல் - 6

  3. புளி - 1 (எலுமிச்சை பழம் அளவு)

  4. பூண்டு - 10 பல்

  5. உப்பு - 1 1/2 மேஜைக்கரண்டி

  6. கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு

  7. எண்ணெய் - 1 தேக்கரண்டி 



செய்முறை



அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் எள்ளைப் போட்டு வறுக்கவும். எள் வெடித்து நின்றதும் அதை தனியாக எடுத்து வைக்கவும்.



அதே கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி மிளகாய் வத்தலை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். பின்னர் புளி, பூண்டு ஆகியவற்றைத் தனித்தனியாக போட்டு வறுக்கவும்.



கடைசியாக அடுப்பை அணைத்து விட்டு அதே கடாயில் கறிவேப்பிலையைப் போட்டு ஓரிரு வினாடிகள் வதக்கி எடுத்து கொள்ளவும்.



ஆறிய பின்னர் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு அதனுடன் உப்பையும் சேர்த்து பொடித்து கொள்ளவும்.எள்ளுப் பொடி ரெடி. இது இட்லி, தோசை, தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும். காற்று புகாத பாட்டிலில் போட்டு ஒரு மாதம் வரை உபயோகிக்கலாம்.


Categories: மருத்துவம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை