Skip to main content

ராஜீவ் காந்தி படுகொலை சந்தேக நபர் பேரறிவாளன் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு!

Mar 09, 2022 83 views Posted By : YarlSri TV
Image

ராஜீவ் காந்தி படுகொலை சந்தேக நபர் பேரறிவாளன் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு! 

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் பிணை வழங்கி  உத்தரவிட்டுள்ளது.



முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கைதிகளில் ஒருவரான பேரறிவாளனுக்கு கடந்தாண்டு தி.மு.க அரசு பதவி ஏற்றதும் சிறை விடுப்பு வழங்கி உத்தரவிட்டது.



தொடர்ந்து 9 மாதங்களாக சிறை விடுப்பு நீட்டிக்கப்பட்ட நிலையில் பேரறிவாளன் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தம்மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்பதால் தம்மை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரியிருந்தார்.



இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



மேலும், 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ளதால் பிணை வழங்கப்படுகிறது என்றும், ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் மாதந்தோறும் பேரறிவாளன் முன்னிலையாக வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



சிறை விடுப்பில் இருந்த போது பேரறிவாளன் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்பதையும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை