Skip to main content

வாட்ஸ்அப் புது அம்சம்- பயனர்களே தயாரா., வருகிறது வாட்ஸ்அப் Poll அம்சம்: கருத்துக்கணிப்பை நீங்களே நடத்தலாம்!

Mar 09, 2022 186 views Posted By : YarlSri TV
Image

வாட்ஸ்அப் புது அம்சம்- பயனர்களே தயாரா., வருகிறது வாட்ஸ்அப் Poll அம்சம்: கருத்துக்கணிப்பை நீங்களே நடத்தலாம்! 

இதுகுறித்து வெளியான தகவலின்படி வாட்ஸ்அப் புதிய அப்டேட்டை வெளியிட தயாராகி வருகிறது. வாட்ஸ்அப் புதிய போல் (POLL) அம்சத்தை கொண்டுவர இருக்கிறது. இந்த அம்சம் சோதனையில் இருக்கிறது. WABetaInfo தளத்தின் தகவலும் இதை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த அம்சமானது ஐஓஎஸ் பயனர்களுக்கு முதற்கட்டாக அறிமுகப்டுத்தப்பட இருக்கிறது. இந்த அம்சமானது v2.22.6.70 என்ற பீட்டா பதிப்பு எண் உடன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.



பேஸ்புக் தளத்தில் முன்னதாக போல் (POLL) அம்சம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து வாட்ஸ்அப்பில் போல் (POLL) அம்சம் குழுக்கள் உருவாக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. இந்த போல் (POLL) அம்சத்தை இயக்கிய உடன் குழு உறுப்பினர்கள் வாக்களிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.



இந்த அம்சமானது பீட்டா சோதனையில் இருக்கிறது. விரைவில் இந்த அம்சம் செயல்பாட்டுக்கு வரும் என கூறப்படுகிறது.வாட்ஸ்அப்-ல் வாய்ஸ் மெசேஜ் ரெக்கார்ட் செய்யும் போது இனி இடைநிறுத்தம் செய்து மீண்டும் தொடங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. வாய்ஸ் நோட்களை பதிவு செய்யும் போது அந்த ஆடியோவை இடைநிறுத்தம் செய்து மீண்டும் தொடங்குவதற்கான அம்சத்தை வாட்ஸ்அப் வெளியிடுகிறது.



இந்த அம்சமானது குறிப்பிட்ட பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டிருக்கிறுது. வாட்ஸ்அப் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பல அம்சங்களை உருவாக்கி வருகிறது. மெசேஜ் ரெக்கார்டிங் செய்யும் போது பயனர்கள் ஆடியோவை இடைநிறுத்தி மீண்டும் தொடங்கும் வகையிலான அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்ய இருக்கிறது. வாட்ஸ்அப் பீட்டாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் அறிமுகப்படுத்தியுள்ளது.வாட்ஸ்அப் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பல அம்சங்களை உருவாக்கி வருகிறது.



அதேபோல் வாய்ஸ் மெசேஜ்களை பதிவு செய்யும் போது ஆடியோவை இடைநிறுத்தி மீண்டும் தொடங்குவதற்கான அம்சத்தை வெளியிட இருக்கிறது. தற்போது குறிப்பிட்ட பீட்டா சோதனையாளர்களுக்கு மட்டுமே இந்த அம்சம் வெளியிடப்பட்டிருக்கிறது. பயனர்கள் தங்கள் குரல் குறிப்பை பதிவு செய்யும் நேரத்தில் அவற்றை இடைநிறுத்தம் செய்யலாம் அதேபோல் அதை மீண்டும் தொடங்கவும் செய்யலாம். வாட்ஸ்அப் வாய்ஸ் குறிப்புகளை கேட்கும் போது அதை இடைநிறுத்தம் செய்து அதை மீண்டும் இயக்கம் செய்யவும் முடியும்.


Categories: தொழில்நுட்பம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை