Skip to main content

மொறு மொறு தோசையின் சீக்ரெட்! இந்த ஒரு பொருள் போதும்.

Mar 08, 2022 76 views Posted By : YarlSri TV
Image

மொறு மொறு தோசையின் சீக்ரெட்! இந்த ஒரு பொருள் போதும். 

நாம் என்னதான் ஹோட்டலில் சென்று மொறு மொறுவென்று கொடுக்கப்படும் தோசையை சில சட்னிகளுடன் சேர்த்து ருசித்தாலும், நாமே வீட்டில் செய்யும் தோசைகளுக்கு எப்போதுமே தனி மவுசு தான். 



நம்முடைய வீடுகளில் நாம் தோசை சுடும் போது சில சமயத்தில் அவை முறுகலாக வராது.



அதற்கு சில ரகசிய குறிப்பு இருக்கின்றது. படித்து பயன் பெறுங்கள்.



வீடுகளில் நாம் சுடும் தோசைக்கு பெரும்பாலும் இட்லி மாவையே பயன்படுத்துகிறோம். இருப்பினும், அவற்றுக்கு பதிலாக தோசைக்கெனச தனி மாவை தயார் செய்வது நல்லது.



அவற்றுக்கு நீங்கள் மாவு அரைக்கும் போது வெந்தயம் கொஞ்சம் அதிகமாகவும், ஒரு பங்கு பச்சரிசி மற்றும் இரண்டு பிடி அவல் சேர்க்க வேண்டும்.



அப்படி செய்யும் போது அவை நன்றாக சிவந்தும் மொறுமொறுவென்றும் வரும்.



மாவு ரொம்பவும் புளிக்காமல் இருக்க வெற்றிலையின் காம்பை கிள்ளி, வெற்றிலையின் மேல் புறம் மாவில் படும்படி கவிழ்த்து வைத்தால், அவற்றை குளிரூட்ட தேவை இருக்காது.



நாம் தோசை சுடும் கல் அவ்வப்போது நமக்கு ஒத்துழைக்காது. இந்த சமயத்தில் கல்லில் சேர்க்கும் எண்ணெய்யோடு சிறிதளவு புளியை சேர்த்துக்கொள்ளலாம்.



அல்லது கல்லில் மீது தேய்க்க பயன்படுத்தும் வெங்காயத்தை இரண்டாக வெட்டி, அவற்றை கல்லில் நன்றாக வதக்கிய பிறகு தோசையை சுட முயற்ச்சிக்கலாம்.


Categories: சமையல்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை