Skip to main content

நேட்டோவுக்கு ரஷ்ய அதிபர் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

Mar 06, 2022 96 views Posted By : YarlSri TV
Image

நேட்டோவுக்கு ரஷ்ய அதிபர் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை 

உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பவர்கள் ரஷ்யாவுடன் மோதுபவர்களாக கருத்தப்படுவர் என்று ரஷ்ய அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.



 



இந்நிலையில்,உக்ரைன் விவகாரத்தில் நேட்டோ தலையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.



மேலும்,தமது பாதுகாப்பு படையினருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் யாரேனும் வான்பரப்பு தடை மேற்கொள்ளும்பட்சத்தில், அவர்கள் எந்த அமைப்பில் (நேட்டோ) உறுப்பினர்களாக இருந்தாலும் அந்த நொடியே அவர்கள் (நேட்டோ) இந்த இராணுவ சண்டையில் பங்கேற்பவர்களாக ரஷ்யாவால் கருத்தப்படுவர்’ என்றாறும் தெரிவித்துள்ளார்.



உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய படைகள் தாக்குலை தீவிரப்படுத்தி உள்ள நிலையில், தங்கள் வான்பகுதியை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக் கோரி நேட்டோ அமைப்பிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார்.



உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விடுத்த கோரிக்கையை நேட்டோ நிராகரித்துள்ளது.



இது தொடர்பாக நேட்டோ தலைவர் ஸ்டோலன்பெர்க் கூறுகையில், வான்பரப்பில் பறக்கத்தடை நடைமுறையை அமுல்படுத்த ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது. நேட்டோ போர் விமானங்களை உக்ரைன் வான் எல்லைக்குள் அனுப்பி ரஷ்ய போர் விமானங்களை சுட்டுவீழ்த்தி ‘விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதி’ என அறிவிப்பது மட்டுமே.



நாம் அதை செய்தால் அது அதிக நாடுகளை உள்ளடக்கி, பெருமளவு மனித இழப்புகளை ஏற்படுத்தி ஐரோப்பாவை முழுமையான போருக்கு கொண்டு செல்லும்’ என கூறி உக்ரைன் விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ளதாக விளக்கமளித்துள்ளார்.



 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை