Skip to main content

நிலைமையை மிகவும் மோசமாக்கும்! உலக நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி எச்சரிக்கை - என்ன நடக்கப்போகிறது?

Mar 05, 2022 77 views Posted By : YarlSri TV
Image

நிலைமையை மிகவும் மோசமாக்கும்! உலக நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி எச்சரிக்கை - என்ன நடக்கப்போகிறது? 

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் எவ்வாறான பாதிப்புக்களை குறித்த நாடுகளுக்கு மட்டும் இல்லாமல் உலகளவில் ஏற்படுத்த போகிறது என்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



இவ்வாறான சூழ்நிலையில் யுத்த களமானது பெரும் பதற்றத்திற்கு மத்தியிலேயே இருந்து வரும் நிலையில் ரஷ்யா மீது உலக நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன.



இந்நிலையில் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து உலக நாடுகளுக்கு முக்கிய எச்சரிக்கையொன்றை ரஷ்ய அதிபர் விளாடிமிர்புட்டின் விடுத்துள்ளார். 



இது குறித்து ரஷ்ய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், உக்ரைனில் ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளை எதிர்ப்பவர்கள் எமது நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலம் நிலைமையை மோசமாகவே மாற்றுகின்றனர்.



எங்கள் அண்டை நாடுகளுக்கு எதிராக எங்களுக்கு எந்த தவறான நோக்கமும் இல்லை. எனவே, அண்டை நாடுகள் தேவையில்லாத பொருளாதாரத் தடைகளை விதிக்கக் கூடாது.



இதுபோன்ற பொருளாதாரத் தடைகள் நிலைமையை மேலும் மோசமாகவே மாற்றும். இப்போதுள்ள சூழலில், நாடுகளுக்கு இடையேயான உறவை எப்படி இயல்பாக்குவது, ஒத்துழைப்பைப் பேணுவது என்பது குறித்துத் தான் நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.



சில முன்னாள் சோவித் நாடுகளின் செயல்பாடுகள் ரஷ்யாவின் பாதுகாப்பைக் குலைக்கும் வகையில் அமைந்துள்ளதாலேயே இந்த இராணுவ நடவடிக்கை எடுக்கப்படுவதாகிறது என சுட்டிக்காட்டியுள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.இதேவேளை உக்ரைன் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக் கோரி உக்ரைன் அதிபர் விடுத்த கோரிக்கையை நேட்டோ அமைப்பு நிராகரித்துள்ள நிலையில் இது தொடர்பில் நேட்டோ அமைப்புக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக கண்டனம் வெளியிட்டுள்ளார்.



இது இவ்வாறிருக்க ரஷ்யாவை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் தொடர்ச்சியாக தடைகளை விதிப்பதானது இந்த யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வருவதற்கு மாறாக உலகளவில் இந்த யுத்தகளம் விரிவடையும் சாத்தியத்தை உண்டாக்கும் ஆபத்து இருப்பதாக அரசியல் அவதானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.



முடிந்தளவிற்கு மேற்கொள்ளப்படும் சமாதான பேச்சுவார்த்தைகளே நடந்து கொண்டிருக்கும், நடக்கவிருக்கும் அழிவுகளையும் மற்றும் பேரழிவுகளையும் தடுக்கும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.



என்ற போதும் தொடர்ச்சியாக என்ன நடக்கப்போகிறது, இந்த யுத்தமானது எவ்வாறான பாதிப்புக்களை ஏற்படுத்தப்போகிறது, சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும் கருத்துக்களைப் போல மூன்றாம் உலக யுத்தத்திற்கு வழி ஏற்படுத்துமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். 


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை