Skip to main content

ஆஸ்திரேலியாவில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Sep 23, 2021 131 views Posted By : YarlSri TV
Image

ஆஸ்திரேலியாவில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! 

ஆஸ்திரேலியாவில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சில இடங்களில் கட்டடங்கள் இடிந்தன. ஆஸ்திரேலியாவின் 2வது பிரபல நகரமான மன்ஸ்பீல்டை மையமாக கொண்டு 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகி இருக்கிறது. இது, ரிக்டர் அளவுகோளில் 5.8 புள்ளிகளாக பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டடங்கள் ஆடியதால், மக்கள் பீதியில் சாலைகளுக்கு ஓடி பாதுகாப்பாக நின்றனர்.



சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்த புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியது. ஆனால், சேதங்கள் மற்றும் பாதிப்பு குறித்த விவரங்கள் எதுவும்  வெளியாகவில்லை. பொதுமக்கள் யாரும் நிலநடுக்கத்தால் காயமடையவில்லை என பிரதமர் ஸ்காட் மோரிசன் உறுதிபடுத்தியுள்ளார். கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு கடற்கரை நகரமாக ப்ரூமில் 6.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை