Skip to main content

ஆப்கானிஸ்தானில் பள்ளிகள் திறப்பு: மாணவிகளுக்கு அனுமதி இல்லை - தலிபான்கள் அறிவிப்பு...

Sep 19, 2021 149 views Posted By : YarlSri TV
Image

ஆப்கானிஸ்தானில் பள்ளிகள் திறப்பு: மாணவிகளுக்கு அனுமதி இல்லை - தலிபான்கள் அறிவிப்பு... 

ஆப்கானிஸ்தானில் நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவிகள் பள்ளிக்கு வருவது குறித்து தலிபான் அரசு ஏதும் அறிவிக்கவில்லை.



ஆப்கானிஸ்தான் முழுவதும் அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளைத் திறக்க தலிபான்கள் தலைமையிலான கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. ஆனால் அந்த உத்தரவில் பள்ளிக் கூடத்திற்கு மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமே வரவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.



ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதை அடுத்து, 1990-களில் இருந்த அடக்கு முறை ஆட்சியைப்போன்று இந்த ஆட்சி இருக்காது. என்றும், பெண்களுக்கு கல்வி உரிமை, வேலைக்குச் செல்லும் உரிமை வழங்கப்படும் என்றும் உறுதி அளித்து இருந்தது. இந்த நிலையில், மாணவிகள் பள்ளிக்கு வருகை தருவது குறித்து எதுவும் அறிவிக்கப்படாததால், அளித்த வாக்குறுதிக்கு மாறாக தலிபான்கள் தற்போது செயல்படுவதாக தெரிகிறது.



ஆரம்பப்பள்ளிகள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன. இங்கு மாணவ-மாணவிகளை தனித்தனி வகுப்புகளில் அமர வைத்து பாடம் எடுக்கின்றனர். ஒரு சில ஆசிரியைகளை கடும் ஆடை கட்டுப்பாடுகளுடன் பல்கலைக்கழகத்திற்கு செல்லவும் அனுமதித்துள்ளனர்.



ஆனால் மகளிர் விவகாரத்துறை அமைச்சகத்தில் பெண் ஊழியர்கள் அனுமதிக்கப்படவில்லை. மகளிர் நலத்தறை அமைச்சகத்தின் பெயரையும் “ஊக்குவித்தல் மற்றும் நல் ஒழுக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் தீமையைத் தடுத்தல்துறை” என்று தலிபான் அரசு பெயர் மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை