Skip to main content

அவித்த முட்டை இருந்தால் இப்படி ஒரு சுவையான ‘முட்டை பஜ்ஜி’ 10 நிமிடத்தில் செய்து பாருங்களேன்!

Feb 07, 2022 82 views Posted By : YarlSri TV
Image

அவித்த முட்டை இருந்தால் இப்படி ஒரு சுவையான ‘முட்டை பஜ்ஜி’ 10 நிமிடத்தில் செய்து பாருங்களேன்! 

வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி எல்லாம் சாப்பிட்டு பார்த்து இருப்போம். வெளியில் செல்லும் பொழுது மாலை நேரத்தில் அதிகம் நம் கண்களில் தென்படுவது பஜ்ஜி வகைகள் ஆகத்தான் இருக்கும். பஜ்ஜி மீது பிரியம் கொண்டவர்கள் இப்படி ஒரு முறை முட்டை பஜ்ஜி செய்து சாப்பிட்டு பாருங்கள், அதற்கு அடிமையாகி போவீர்கள். அந்த அளவிற்கு சுவை கொடுக்கக் கூடிய இந்த எளிமையான முட்டை பஜ்ஜி எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.



முட்டை பஜ்ஜி செய்ய தேவையான பொருட்கள்:

முட்டை – 4, கடலை மாவு – ஒரு கப், அரிசி மாவு – கால் கப், உப்பு – தேவையான அளவு, சமையல் சோடா – கால் டீஸ்பூன், மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன், இஞ்சி பூண்டு – விழுது ஒரு டீஸ்பூன்.



முட்டை பஜ்ஜி செய்முறை விளக்கம்:

முதலில் பஜ்ஜி செய்ய தேவையான முட்டைகளை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு அடுப்பை பற்ற வைத்து அதில் முட்டைகள் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். தண்ணீர் கொதித்ததும் முட்டைகளை சேர்த்து அதனுடன் கொஞ்சம் சோடா உப்பு சேர்த்து விட்டால் முட்டையின் ஓடு உடையாமல் நன்கு வெந்து விடும். சரியாக பத்து நிமிடம் மிதமான தீயில் வைத்து எடுத்தால் முட்டை நன்கு கடினமாக இல்லாமல் இலகுவாக வேகும். அதன் பின்பு முட்டைகளை இரண்டாக நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.இப்போது பஜ்ஜி மாவு செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவிற்கு கடலை மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். கடலை மாவுடன் அரிசி மாவு சேர்க்க வேண்டும். எந்த அரிசி மாவாக இருந்தாலும் பரவாயில்லை. பின்னர் இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன், வெறும் மிளகாய்த் தூள் ஒரு டீஸ்பூன் சேர்த்துக் கொள்ளுங்கள்.



இவை நன்கு கலந்துவிட்டு கொண்டு தேவையான அளவிற்கு உப்பு போட்டுக் கொள்ளுங்கள்.பின்னர் சமையல் சோடா சேர்த்துக் கொள்ள வேண்டும். பஜ்ஜி மிருதுவாக வருவதற்கு சமையல் சோடா சேர்த்தால் தான் சரியாக இருக்கும். பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் நீங்கள் வெட்டி வைத்துள்ள முட்டை துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து பஜ்ஜி மாவில் முக்கி எடுத்து போட வேண்டும்.எண்ணெயை மிதமான தீயில் வைத்து இரண்டு புறமும் பஜ்ஜி சிவக்க வறுத்து எடுத்தால் மிருதுவான மற்றும் மொறுமொறுவென சுவையான முட்டை பஜ்ஜி தயார். எவ்வளவு சுலபமாக இந்த முட்டை பஜ்ஜி செய்யலாம் தெரியுமா? வீட்டில் சாப்பிட ஏதாவது இருக்கிறதா? என்று கேட்கும் குழந்தைகளுக்கு இது போல முட்டை பஜ்ஜி செய்து கொடுத்து பாருங்கள், உங்களை ரொம்பவும் பாராட்டுவார்கள். அசைவ விரும்பிகளுக்கு இந்த முட்டை பஜ்ஜி ரொம்பவே ஒரு பிடித்தமான மாலை நேர சிற்றுண்டியாக இருக்கும். நீங்களும் இதே முறையில் செய்து பார்த்து அசத்துங்கள்.


Categories: சமையல்
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை