Skip to main content

கலைக்கப்படவுள்ள சிறிலங்கா நாடாளுமன்றம்? துருப்புச் சீட்டுக்களை வீசத் தயாராகும் அரசாங்கம்!

Feb 06, 2022 82 views Posted By : YarlSri TV
Image

கலைக்கப்படவுள்ள சிறிலங்கா நாடாளுமன்றம்? துருப்புச் சீட்டுக்களை வீசத் தயாராகும் அரசாங்கம்! 

அரசியலமைப்புக்கு உட்பட்ட அதிகாரம் கிடைத்தவுடன் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ள அரசாங்கம், அதற்கான இரண்டு துருப்புச் சீட்டுக்களை வீச தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



முதல் துருப்புச் சீட்டாக புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது. புதிய அரசியலமைப்புச் சட்ட வரைவை அரசாங்கம் ஒக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் மாத ஆரம்பித்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



இதன் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் ஆட்சி முறையில் சில மாற்றங்களை செய்யவும் வடக்கு, கிழக்கு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



இதனை தவிர எதிர்வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக மக்களுக்கு பெரியளவில் நிவாரணங்களை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது அரசாங்கத்தின் இரண்டாவது துரும்புச் சீட்டு.



அதன் ஊடாக அரசாங்கம் இழந்து வரும் மக்களின் ஆதரவை மீண்டும் பெற்று தேர்தலுக்கு செல்வது என்பது அரசாங்கத்தின் திட்டமாக இருப்பதாக கூறப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி 5 ஆம் திகதி அரச தலைவருக்கு நாடாளுமன்றத்தை கலைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை