Skip to main content

இந்தியா இலங்கை கடன் தொடர்பில் இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்!.இந்தியா, இலங்கைக்கு வழங்க உள்ள பெருந்தொகை கடன் தொடர்பான செய்திகளை இந்தியாவின் ஆங்கில ஊடகமான NDTV நேற்று வெளியிட்டுள்ளது. இந்த ஊடகத்தின் செய்திக்கு அமைய இலங்கை பணம் இல்லாத நாடு என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. நிதியின்மை காரணமாக இலங்கையால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய தேவையான டீசலை கொள்வனவு செய்ய முடியவில்லை. மின்சாரத்தை உற்பதி செய்ய முடியாத காரணத்தினால், இலங்கை மக்கள் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையின் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலைமையில் இருந்து மீள இந்திய அரசு 500 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர கடனுதவியை இலங்கைக்கு வழங்குகிறது. இந்த அவசர கடனை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய விசேட நிபந்தனை குறித்தும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா வழங்கும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி, இந்திய எரிபொருள் விநியோகஸ்தர்களிடமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. இந்தியா வழங்கும் பணத்தில் இந்தியாவிடமே எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டும் என்பதே இதன் அர்த்தம். இதன் மூலம் இந்தியா வழங்கிய கடன் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பிச் செல்லும். அதேவேளை இந்த நிவாரணக் கடனை தவிர இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்த மேலும் 915 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இந்தியா இணங்கியுள்ளது என NDTVயின் செய்தியில் கூறப்பட்டுள்ளது. இது சம்பந்தமான பேச்சுவார்த்தை கடந்த இரண்டு வாரங்களில் நடந்துள்ளது. இதனை தவிர மேலும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்குவது சம்பந்தமாக ராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இலங்கைக்கு தற்போது மிக முக்கியமாக தேவைப்படும் உணவு மற்றும் மருந்துகளை கொள்வனவு செய்ய இந்த கடன் பெறப்படவுள்ளது. இந்தியா வழங்கும் இந்த ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி, இந்தியாவிடம் இருந்தே உணவு மற்றும் மருந்தை கொள்வனவு செய்ய வேண்டும் என இந்தியா நிபந்தனை விதித்துள்ளதாக NDTVயின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Feb 03, 2022 87 views Posted By : YarlSri TV
Image

இந்தியா, இலங்கைக்கு வழங்க உள்ள பெருந்தொகை கடன் தொடர்பான செய்திகளை இந்தியாவின் ஆங்கில ஊடகமான NDTV நேற்று வெளியிட்டுள்ளது.

இந்த ஊடகத்தின் செய்திக்கு அமைய இலங்கை பணம் இல்லாத நாடு என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

நிதியின்மை காரணமாக இலங்கையால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய தேவையான டீசலை கொள்வனவு செய்ய முடியவில்லை. மின்சாரத்தை உற்பதி செய்ய முடியாத காரணத்தினால், இலங்கை மக்கள் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையின் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த நிலைமையில் இருந்து மீள இந்திய அரசு 500 மில்லியன் அமெரிக்க டொலர் அவசர கடனுதவியை இலங்கைக்கு வழங்குகிறது. இந்த அவசர கடனை வழங்கும் போது பின்பற்ற வேண்டிய விசேட நிபந்தனை குறித்தும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா வழங்கும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி, இந்திய எரிபொருள் விநியோகஸ்தர்களிடமே பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.

இந்தியா வழங்கும் பணத்தில் இந்தியாவிடமே எரிபொருளை கொள்வனவு செய்ய வேண்டும் என்பதே இதன் அர்த்தம். இதன் மூலம் இந்தியா வழங்கிய கடன் மீண்டும் இந்தியாவுக்கே திரும்பிச் செல்லும்.

அதேவேளை இந்த நிவாரணக் கடனை தவிர இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்த மேலும் 915 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இந்தியா இணங்கியுள்ளது என NDTVயின் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான பேச்சுவார்த்தை கடந்த இரண்டு வாரங்களில் நடந்துள்ளது. இதனை தவிர மேலும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனை வழங்குவது சம்பந்தமாக ராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இலங்கைக்கு தற்போது மிக முக்கியமாக தேவைப்படும் உணவு மற்றும் மருந்துகளை கொள்வனவு செய்ய இந்த கடன் பெறப்படவுள்ளது. இந்தியா வழங்கும் இந்த ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி, இந்தியாவிடம் இருந்தே உணவு மற்றும் மருந்தை கொள்வனவு செய்ய வேண்டும் என இந்தியா நிபந்தனை விதித்துள்ளதாக NDTVயின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை