Skip to main content

நாமலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு என மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது....

Feb 02, 2022 76 views Posted By : YarlSri TV
Image

நாமலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு என மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது....  

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் பண மோசடி தொடர்பில்  ஐந்து நபர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.



மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் இடம்பெற்ற இந்த வழக்கானது எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இரண்டாவது மற்றும் ஆறாவது குற்றவாளிகள் ஆஜராகாத நிலையில் வழக்கு விசாரணையை தொடர  மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.



2013 மற்றும் 2014 க்கு இடையில், நாமல் ராஜபக்சவிற்கு சொந்தமான Gowers Corporate Services (Pvt) Ltd நிறுவனத்தில் இருந்து 30 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்தார்.



நாமல் ராஜபக்ஷ, இந்திக கருணாஜீவ, சுஜானி போகொல்லாகம, இரேஷா சில்வா, நித்ய சேனானி சமரநாயக்க மற்றும் Gowers Corporate Services (Pvt) Ltd ஆகியோருக்கு எதிராக 11 பணச் சலவைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.    


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை