Skip to main content

Gmail Layout-ஐ மாற்றும் கூகிள்! அனைத்து வசதிகளும் ஒருங்கிணைந்த தளமாக இருக்கும் என அறிவிப்பு

Feb 02, 2022 118 views Posted By : YarlSri TV
Image

Gmail Layout-ஐ மாற்றும் கூகிள்! அனைத்து வசதிகளும் ஒருங்கிணைந்த தளமாக இருக்கும் என அறிவிப்பு 

உலகில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படும் ஜிமெயில் தகவல் தொடர்பு தளத்தின் தளவமைப்பில்(layout) மாற்றம் கொண்டுவர இருப்பதாக கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.



இந்த தளவமைப்பு (layout) அனைத்து கூகிள் வசதிகளையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பக்கமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. இந்த தளவமைப்பு (layout) பிப்ரவரி மாத தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Google Meet, Google Chat, and Spaces ஆகியவற்றை இணைத்த ஜிமெயில் பக்கமாக மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் அனைத்து கூகுளை பயன்பாடுகளும் இனி ஜிமெயில் தளவமைப்பு (layout) தளத்தின் இடதுபக்கம் பெரிய அளவு சினத்துடன் வைக்கப்பட்டு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றம் ஜிமெயில் பயனர்களுக்கு அவர்களது பயன்பாட்டை எளிமையாக்கும் என கூறப்படுகிறது.



இதனை பயனர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக அறிவிப்பு தகவல்கள் அனுப்படும் என்றும், ஏப்ரல் மாதத்திற்குள் இதற்கு மாறாத அனைத்து ஜிமெயில் பயனர்களுக்கும் இந்த புதிய தளவமைப்பு (layout) மாற்றப்படும் என தெரிவித்துள்ளது. விருப்பம் இல்லாத பயனர்கள் பழைய தளவமைப்பு (layout) மாறிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. ஆனால் இந்த மாற்றங்கள் 2022ம் ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்குள் இயல்புநிலைக்கு (default) கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   




Categories: தொழில்நுட்பம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை