Skip to main content

ரணில் ராஜபக்ச தரப்பை திணறடிக்கும் மாற்று வியூகம்!மைத்திரியின் ஆச்சரியமான இறுதி அத்தியாயமா?

Jan 19, 2022 86 views Posted By : YarlSri TV
Image

ரணில் ராஜபக்ச தரப்பை திணறடிக்கும் மாற்று வியூகம்!மைத்திரியின் ஆச்சரியமான இறுதி அத்தியாயமா? 

நான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் சிறிகொத்தவிற்கு சென்று ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கத்துவத்தை கோரி இருந்தால், என்ன நடந்திருக்கும்..?. இது மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவான புதிதில் ஒரு நாள் சிரித்தவாறு சில ஊடகவியலாளர்களிடம் எழுப்பிய கேள்வி.



“ என்ன நடக்கும்? நீங்கள் அங்கத்துவத்தை பெற்ற உடன் நீங்கள் அந்த கட்சியின் தலைவராகி இருப்பீர்கள்.” என அங்கிருந்த ஊடகவியலாளர் ஒருவர் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்புக்கு அமைய அந்த கட்சியின் உறுப்பினர் ஒருவர் ஜனாதிபதியாக பதவிக்கு வந்தால், கட்டாயம் அவர் கட்சியின் தலைவராவார் என்ற விடயத்தை  நினைவுப்படுத்தியே அந்த ஊடகவியலாளர் இதனை கூறினார்.



உண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக வர வேண்டும் என்ற எண்ணம் மைத்திரிக்கு இருந்ததா?. அதனை கூற முடியாது. எனினும் மைத்திரி வெற்றி பெற்ற நேரத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு மைத்திரிக்கு அங்கத்துவத்தை வழங்கி கட்சியின் தலைவர் பதவியை வழங்கி இருந்தால், இன்று மருந்துக்குக் கூட ராஜபக்சவினரை கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கும்.



அப்படியானால், தற்போதும் ஐக்கிய தேசியக் கட்சியை நாட்டை ஆட்சி செய்திருக்கும். இதனை வேறு எவரையும் விட ரணில் விக்ரமசிங்க நன்றாக அறிந்தவராக இருந்தார். இதனால், ஐக்கிய தேசியக் கட்சியையும் மைத்திரியையும் பிரித்து வைக்கும் தேவை அவருக்கு இருந்தது.2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன பொதுத் தேர்தலை அறிவித்து, மகிந்தவுக்கு வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பை வழங்கியுள்ளார் என்பதை அன்றைய பிரதமரான ரணில் விக்ரமசிங்க, பொதுத் தேர்தல் பிரசாரக் குழுவின் கூட்டத்திலேயே அறிந்துக்கொண்டார். அந்த நேரத்தில் பிரசாரக் குழுவில் இருந்தவர்கள் ஆச்சரியமடைந்து, மைத்திரியை கெட்டவார்த்தைகளால் திட்டிய போது, ரணில் அற்புதமான கதை ஒன்றை கூறினார்.



“ மகிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் இருந்து வெளியேற வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க நான் மகிந்தவை சந்திக்க சென்ற போது, மைத்திரியை ஐந்து காசுக்கு நம்ப வேண்டாம், அவர் எனக்கு செய்ததை உங்களுக்கும் செய்ய மாட்டார் என்று எண்ண வேண்டாம் எனக் கூறினார்” என ரணில் குறிப்பிட்டார். மகிந்த அன்று தனக்கு வழங்கிய ஆலோசனை முற்றிலும் சரியானது என விளக்கவே ரணில் இந்த கதையை கூறினார்.ரணில் அன்றில் இருந்து மகிந்தவின் ஆலோசனையை தலையில் வைத்துக்கொண்டே மைத்திரியை நோக்கி வந்தார். மைத்திரி தனது ஜனாதிபதி பதவிக்கு வேட்டு வைத்தது போல், ரணிலின் கட்சித் தலைவர் பதவிக்கும் வேட்டு வைப்பார் என்ற நிலைப்பாட்டை மகிந்த ரணிலுக்குள் விதைத்தார். ரணில் அதற்காகவே அஞ்சினார்.



2015 ஆம் ஆண்டு மைத்திரி ஜனாதிபதியாக தெரிவான பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டதும் ரணில், மைத்திரியை வாழ்த்தினார். மைத்திரி சுதந்திரக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று அந்த கட்சியின்பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்று தன்னை பிரதமராக நியமிப்பார் என்ற காரணத்திற்காக ரணில் மைத்திரியை வாழ்த்தவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகும் இறுதி வாய்ப்பும் மைத்திரிக்கு இல்லாமல் போனது என்று மனதை தோற்றிக்கொண்டே வாழ்த்தினார்.மைத்திரியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் நெருங்குவது தொடர்பாக இரண்டு பேர் அச்சம் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் மகிந்த. மைத்திரி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அதன் தலைவராக மாறினால், ராஜபக்சவினரின் கதை முடிந்துவிடும் என்பதை மகிந்த அறிந்திருந்தார். மைத்திரி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக பதவிக்கு வந்தால், தனது கதை முடிந்துவிடும் என ரணில் அறிந்திருந்தார்.



அதேபோல் மைத்திரி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை பதவியை கையில் எடுத்த பின்னரும் மகிந்தவும் ரணிலும் அச்சத்திலேயே இருந்தனர். மைத்திரி சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்தை கைப்பற்றினால், ராஜபக்சவினர் முடிந்து விடுவர் என மகிந்த கணக்கு போட்டிருந்தார். மைத்திரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றினால், தன்னை விரட்டி விட்டு, சுதந்திரக் கட்சியின் அரசாங்கத்தை அமைப்பார் என ரணில் பயந்தார். இதனால், மைத்திரிக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்ற இடமளிக்காது, மகிந்த கூட்டு எதிர்க்கட்சியை உருவாக்கினார்.]

 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை