Skip to main content

தேங்காயின் விலையில் சடுதியான மாற்றம்.

Jan 14, 2022 95 views Posted By : YarlSri TV
Image

தேங்காயின் விலையில் சடுதியான மாற்றம்.  

சந்தையில் தேங்காயின் விலையும்  10 முதல் 15 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக இலங்கை தெங்கு செய்கையாளர்கள் சங்கம் தெரிவித்திருக்கின்றது. 



விளைச்சல் குறைவடைந்துள்ளமையே விலை அதிகரிப்புக்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.



உரம் இன்மையால் தேங்காயின் விளைச்சல் குறைவடைந்துள்ளது. இந்த நிலையில், சந்தையில் தற்போது தேங்காய் ஒன்று 80 முதல் 95 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக அந்த சங்கம் தகவல் தெரிவித்திருந்தது. 



இதேவேளை, கடந்த சில நாட்களாக சிறிதளவு குறைவு ஏற்பட்டிருந்த மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளன.



அகில இலங்கை விஷேட பொருளாதார மத்திய நிலைய ஒன்றியத்தின் தலைவர் அருணசாந்த ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார்.



போஞ்சி, கரட், லீக்ஸ், கோவா பீட்ரூட் ஆகிய மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன. 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை