Skip to main content

நாடு முடக்கப்படுகின்றதா? வெளியாகியுள்ள அறிவிப்பு

Jan 12, 2022 83 views Posted By : YarlSri TV
Image

நாடு முடக்கப்படுகின்றதா? வெளியாகியுள்ள அறிவிப்பு  

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நாடு மூடப்படுமா என்பதை தற்போது கணிக்க முடியாது என விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஜூட் ஜயமஹ தெரிவித்துள்ளார்.



சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று (12) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,



"நாளுக்கு நாள், வாரத்துக்கு வாரம், மாதாமாதம், நிலைமையை ஆய்வு செய்து, அடுத்தகட்ட முடிவுகளை எடுக்கிறோம். நாட்கள் மாதங்கள் வேகமாக நகர்ந்து செல்கின்றன . அதனால் அடுத்த வாரம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வாரம்.



பாடசாலைகள் அனைத்தும் ஆரம்பமாகின்றன." "ஏப்ரல் மீண்டும் ஒரு பண்டிகை காலம் வருகிறது, எனவே நாம் தற்போதே அது குறித்து கவனம் செலுத்தி சுகாதார பழக்கங்களுடன் செயற்படுத்தல் கட்டாயமாகும்.



"பிப்ரவரி 1ம் திகதி நாட்டை மூடுவது குறிது எமக்கு இப்போது கணிக்க முடியாது." "வைரஸின் தாக்கம் குறித்து நாங்கள் ஆலோசனை கூறுகிறோம். ஆனால் கணிப்பது எங்களுக்கு மிகவும் கடினமாக உள்ளது.  



புதிய பிறழ்வு வந்தாலும், முகக்கவசத்தை அணிந்திருந்தால் பரவாது. "இன்னொரு விடயம் என்னவென்றால், நாடு இயல்பு நிலைக்கு வரவில்லை, புதிய பொது தனிமைப்படுத்தலுக்குதான் நாம் சென்றுள்ளோம்."



"நம் நாட்டில் கோவிட் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா ஒன்றாக தொற்றிய நோயாளர்கள் இதுவரை பதிவாகவில்லை. அவ்வாறு பதிவானாலும், இது ஒரு பாரிய பிரச்சனை இல்லை." என தெரிவித்துள்ளார். 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை