Skip to main content

ஒமைக்ரானை தொடர்ந்து புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு. சைப்ரஸ் நாட்டில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள்

Jan 12, 2022 117 views Posted By : YarlSri TV
Image

ஒமைக்ரானை தொடர்ந்து புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு. சைப்ரஸ் நாட்டில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள்  

 தென்னாப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், உருமாற்றம் அடைந்த புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.



புதிய வகை வைரசுக்கு அறிவியலாளர்கள் டெல்டாக்ரான் என்று பெயர் வைத்துள்ளனர். முன்பு உருமாற்றம் அடைந்த டெல்டா மற்றும் ஒமைக்ரான் ஆகிய வைரஸ்களின் பண்புகளை ஒத்திருப்பதால் புதிய கெரோனா வேரியன்டிற்கு டெல்டாக்ரான் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 



டெல்டாக்ரானின் பாதிப்பு முதன் முறையாக மத்திய கிழக்கு நாடான சைப்ரஸில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி  தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பு ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை தொடர்ந்து உருமாறி வருவதால் பாதிப்புகள் அடெல்டாக்ரான் வைரஸை உறுதி செய்துள்ள சைப்ரஸ் நாட்டின் சுகாதார அமைச்சர் மிக்காலிஸ், தற்போதைய சூழலில் டெல்டாக்ரான் குறித்து மக்கள் பதற்றப்பட தேவையில்லை என்றும், புதிய வைரஸ் தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை