Skip to main content

கறுப்பு பட்டியலில் இருந்து மக்கள் வங்கியை நீக்கியது சீன தூதுரகம்.

Jan 11, 2022 80 views Posted By : YarlSri TV
Image

கறுப்பு பட்டியலில் இருந்து மக்கள் வங்கியை நீக்கியது சீன தூதுரகம். 

சீன தூதரகத்தின் பொருளாதாரம் மற்றும் வணிக பிரிவு, மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலிலிருந்து விடுவித்துள்ளது.



சீனாவில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உரத்தில், தீங்கு விளைவிக்கும் பக்றீரியா உள்ளதாக கூறி அதனை நிராகரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருந்தது.



இந்த நிலையில், அதற்கான பணத்தை செலுத்த மக்கள் வங்கி பின்வாங்கிய நிலையில், மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலுக்குள் உள்வாங்க சீன தூதரகம் நடவடிக்கை எடுத்திருந்தது.



அதனைத் தொடர்ந்து, இரண்டு தரப்பினரும் நீதிமன்றில் இணக்கப்பாட்டை எட்டிய நிலையில், மக்கள் வங்கி 6.9 மில்லியன் அமெரிக்க டொலரை கடந்த 7ம் திகதி செலுத்தியிருந்தது.



இந்நிலையில், சீன தூதரகத்தின் பொருளாதாரம் மற்றும் வணிக பிரிவு, மக்கள் வங்கியை கறுப்பு பட்டியலிலிருந்து விடுவித்துள்ளதாக தெரிவித்துள்ளது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை