Skip to main content

எரிவாயு விலை உயர்வு எதிரொலி - கஜகஸ்தான் போராட்டத்தில் போலீசார் உள்பட 12 பேர் பலி!

Jan 07, 2022 103 views Posted By : YarlSri TV
Image

எரிவாயு விலை உயர்வு எதிரொலி - கஜகஸ்தான் போராட்டத்தில் போலீசார் உள்பட 12 பேர் பலி! 

எண்ணெய் வளமிக்க மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் கார்களுக்கு பெரும்பாலும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.



இதற்கிடையே, கஜகஸ்தான் அரசு இந்த எரிபொருள் மீதான விலையை அண்மையில் உயர்த்தியது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் வெடித்தது.



இதையடுத்து, கஜகஸ்தானின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டி, மேற்கு மங்கிஸ்டாவ் மாகாணத்தில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. அல்மாட்டி நகரில் மேயரின் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினர். அவர்களை விரட்டியடிக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் இரு தரப்புக்கும் இடையில் பயங்கர மோதல் வெடித்தது. 



அரசுக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தால், அந்நாட்டின் அதிபர் காசிம் ஜோமார்ட் டோகாயேவ் அல்மாட்டி நகரிலும், மேற்கு மங்கிஸ்டாவ் மாகாணத்திலும் 2 வார காலத்துக்கு அவசர நிலைபிரகடனப்படுத்தப்படுத்தினார்.



அத்துடன், திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு மீதான விலையை குறைப்பதாக அறிவித்தாலும், போராட்டமும், வன்முறையும் தொடர்ந்து வருகிறது.



இந்நிலையில், தொடர் போராட்டம் மற்றும் வன்முறை காரணமாக போலீசார் உள்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.



முன்னதாக, கஜகஸ்தான் பிரதமர் அஸ்கர் மாமின் தலைமையிலான அரசு நேற்று ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை