Skip to main content

தொலைபேசி உரையாடலின் போது புதினுக்கு, ஜோ பைடன் கடும் எச்சரிக்கை!

Jan 01, 2022 91 views Posted By : YarlSri TV
Image

தொலைபேசி உரையாடலின் போது புதினுக்கு, ஜோ பைடன் கடும் எச்சரிக்கை! 

தொலைபேசி உரையாடலின் போது ரஷிய அதிபர் புதினை, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடுமையாக எச்சரித்தார்.

ஜோ பைடன்-புதின் சந்திப்பு



அமெரிக்கா ரஷியா இடையே சமீப காலமாக மோதல் வலுத்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ரஷிய அதிபர் புதின் ஆகிய இருவரும் சுவிட்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் முதல் முறையாக நேரில் சந்தித்து பேசினார்.



இருந்தபோதிலும் இந்த சந்திப்பு இருதரப்பு உறவில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் இரு நாடுகள் இடையிலான மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.



இதற்கு தீர்வு காணும் வகையில் இருநாட்டு தலைவர்களும் இன்னும் சில நாட்களில் மீண்டும் ஜெனிவாவில் நேரில் சந்தித்து பேச உள்ளனர்.



இந்தநிலையில் இந்த நேரடி சந்திப்புக்கு முன்பாக ரஷியா அதிபர் புதினும், அமெரிக்க ஜனாதிபதி புதினும் நேற்று முன்தினம் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை சுமார் 50 நிமிடங்கள் நீடித்தது.



உக்ரைனை ஆக்கிரமிக்கும் விதமாக எல்லையில் ரஷியா படைகளை குவித்து வரும் விவகாரத்தில் அமெரிக்கா, ரஷியா இடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் இருநாட்டு தலைவர்கள் இடையே இந்த தொலைபேசி உரையாடல் நடந்தது.



இந்த பேச்சுவார்த்தை மிகவும் வெளிப்படையாக அமைந்ததாகவும், உக்ரைன் விவகாரத்தில் புதினுக்‌கு ஜோ பைடன் நேரடியாக எச்சரிகை விடுத்ததாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்தது. வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி இது குறித்து கூறியதாவது:-



உக்ரைனுடனான பதற்றத்தை தணிக்க புதினை, ஜோ பைடன் அறிவுறுத்தினார். மேலும் ரஷியா உக்ரைனை மேலும் ஆக்கிரமித்தால் அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் தீர்க்கமாக பதிலளிப்பார்கள் என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.



அதோடு, உக்ரைனுக்கு எதிராக மேலும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டால் ரஷியா மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதிக்கும் என கூறி புதினை ஜோ பைடன் நேரடியாக எச்சரித்தார்.



இவ்வாறு ஜென் சாகி கூறினார்.



இதனிடையே ஜோ பைடனின் எச்சரிக்கைக்கு புதின் காட்டமாக பதிலளித்ததாக புதினின் வெளியுறவு ஆலோசகர் யூரி உஷாகோவ் கூறினார்.



இதுகுறித்து அவர் கூறுகையில் “பொருளாதார தடைகள் விதிக்கும் அமெரிக்காவின் முடிவு தவறானது என்று குறிப்பிட்ட புதின், இத்தகைய நடவடிக்கை இருநாடுகளுக்கு இடையிலான உறவை முற்றிலும் முறியடிக்க வழிவகை செய்யும் என எச்சரித்தார். அதோடு உக்ரைன் ஒருபோதும் நேட்டோவில் சேர அனுமதிக்கப்பட மாட்டாது என்ற எழுத்துப்பூர்வ உறுதிப்பாட்டை புதின் மீண்டும் வலியுறுத்தினார்” என்றார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை