Skip to main content

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் சீனா தங்களின் மிக முக்கிய கூட்டாளி என தெரிவித்தனர். இதுதொடர்பாக, தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜபிபஹுல்லா முஜாஹித் கூறியதாவது!

Sep 05, 2021 130 views Posted By : YarlSri TV
Image

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள் சீனா தங்களின் மிக முக்கிய கூட்டாளி என தெரிவித்தனர். இதுதொடர்பாக, தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜபிபஹுல்லா முஜாஹித் கூறியதாவது! 

சீனா எங்களின் மிக முக்கிய கூட்டாளி. ஆப்கானிஸ்தானை பொருளாதார ரீதியாக வலுப்படுத்துவதற்கு சீனாவைப் பெரிதும் நம்புகிறோம். சீனா எங்களுக்கு ஓர் அடிப்படை மற்றும் அசாதாரண வாய்ப்பை பிரதிபலிக்கிறது. பொருளாதாரத்தை வலுப்படுத்த, நிதியளிக்க சீனா தயாராக இருக்கிறது.



ஆப்கானிஸ்தானில் வளமான சுரங்கங்கள் உள்ளன. சீனாவின் உதவியால் அவற்றை மீண்டும் செயல்படவைக்கலாம், நவீனமயமாக்கலாம். அதோடு சீனாவின் மூலமாக உலகெங்கிலும் உள்ள சந்தைகளுக்கு எங்கள் சுரங்க தயாரிப்புகளை எடுத்துச் செல்லலாம். சீனாவை ஆப்பிரிக்கா ஆசியா மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்க முயற்சிக்கும் சீனாவின் ‘ஒன் பெல்ட், ஒன் ரோடு' முயற்சிக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் என கூறினார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை