சைமா விருதில் 14 பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள சூரரைப் போற்று!...
Aug 21, 2021 125 views Posted By : YarlSri TV
சைமா விருதில் 14 பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள சூரரைப் போற்று!...
சூரரைப் போற்று' திரைப்படம் 2020-ம் ஆண்டிற்கான தென்னிந்திய சைமா விருத்திற்காக 14 பிரிவில் போட்டிக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான ‘சூரரைப் போற்று‘ படத்திற்கு மக்களிடத்தில் அமோக வரவேற்பு கிடைத்தது. அபர்ணா பாலமுரளி பொம்மியாக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ஜிவியின் இசை படத்திற்கு பெரிதும் பக்க பலமாக அமைந்தது. ஏர் டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருந்தது.
ஊரடங்கால் தள்ளி வைக்கப்பட்டிருந்த தென்னிந்திய சைமா விருதுகள் தற்போது மீண்டும் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டிற்கான தென்னிந்திய சைமா விருத்திற்காக சூரரைப் போற்று திரைப்படம் 14 பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த குணசித்திர நடிகர், சிறந்த குணச்சித்திர நடிகை, சிறந்த இசை இயக்குனர், சிறந்த பாடலாசிரியர், சிறந்த பின்னணிப் பாடகர், சிறந்த பின்னணிப் பாடகி(2), சிறந்த வில்லன், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த நகைச்சுவை நடிகர் என்ற 14 பிரிவில் சூரரைப் போற்று திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் சூரரைப்போற்று படத்திற்காக சூர்யா மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவில் சிறந்த நடிகராகத் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.அதே விழாவில் சிறந்த படமாகவும் சூரரைப் போற்று தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago