Skip to main content

ஜனநாயக ஆட்சிக்கு இடமே இல்லை” – தலிபான்கள் திட்டவட்டம்… நரகத்துக்கு செல்ல தயாராகும் ஆப்கான்!!

Aug 19, 2021 196 views Posted By : YarlSri TV
Image

ஜனநாயக ஆட்சிக்கு இடமே இல்லை” – தலிபான்கள் திட்டவட்டம்… நரகத்துக்கு செல்ல தயாராகும் ஆப்கான்!! 

ஆப்கானிஸ்தான் என்பது எந்நேரமும் ரத்த ஆறு ஓடிக்கொண்டிருந்த நாடு தான். அங்கே மக்கள் நிம்மதியாக வாழ்ந்து பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே இருக்கும். ஆக்கிரமிப்புகளின் நாடு என்ற மோசமான வர்ணனைக்கு பெயர் போன நாடு. பல்வேறு கொடுங்கோல் ஆட்சியாளர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் ஆப்கானிஸ்தான் மக்களை ஆட்டிப் படைத்துள்ளனர். ஆனால் அவர்களை எல்லாம் விஞ்சும் அளவிற்கு ஆட்சி செய்தவர்கள் தான் இந்த தலிபான்கள். இடையே 20 ஆண்டுகள் அரைகுறை ஜனநாயகத்துடன் மக்கள் ஓரளவு நிம்மதியாக இருந்தனர். அதனை கெடுக்க மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கிறார்கள்.



அவர்கள் எப்படி ஆட்சி செய்வார்கள், பெண்களுக்கு உரிமை கிடைக்குமா, ஜனநாயக முறைப்படி ஆட்சி அமையுமா என பல்வேறு குழப்பமான கேள்விகள் ஆப்கானிஸ்தான் மக்களிடம் எழுந்துள்ளன. மீண்டும் இஸ்லாமிய ஷரியத் சட்டப்படி தான் கொடுங்கோல் ஆட்சி நடைபெறுமா என்ற அச்சமும் அவர்களை விட்டு அகலவில்லை. பலி கொடுக்க போகும் ஆடுகளுக்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றுவது போல, மக்களின் அச்சத்தைப் போக்க வடிவேலு காமெடி காட்சி பாணியில் நாங்க முன்ன மாறி இல்ல சார்… இப்போ திருந்திட்டோம் என்ற தொனிலேயே தலிபான்கள் பேசி வருகிறார்கள். மக்கள் தலையை உலுக்கிவிட்டால் வெட்டி விடலாம் என்ற திட்டமா என்று தெரியவில்லை.



இதற்கு தலிபான் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தலிபான் அமைப்பின் நிர்வாகி வஹீதுல்லாஹ் ஹஷிமி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ஆப்கானிஸ்தானில் ஜனநாயக ரீதியான ஆட்சிக்கு இடமே இல்லை. எங்களுக்கு ஷரியத் சட்டம் இருக்கிறது. அதுபோதும். அதன்படி தான் ஆட்சி நடக்கும். ஜனநாயக முறைக்கான எந்த அடிப்படைக் கட்டமைப்பும் இங்கு இல்லை. 1996-2001ஆம் ஆண்டு வரை முல்லா ஓமர் தலைமையில் எப்படி ஆட்சி நடந்ததோ அதேபோன்றதொரு ஆட்சி தான் இந்த முறையும் நடக்கும். அதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஷரியத் சட்டங்களுக்கு உட்பட்டு பெண்களுக்கான உரிமைகள் வழங்கப்படும். சுகாதாரத்துறையில் பெண்கள் பணியாற்றலாம், கல்வி கற்கலாம்” என்றார்.



இவர் சொல்வது போல ஷரியத் சட்டம் ஆட்சி செய்தால் நிச்சயம் ஆப்கானிஸ்தான் இன்னொரு நரகத்துக்குள் நுழையப் போகிறது என்பதை கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். ஆப்கானிஸ்தானில் இவர்கள் ஆண்ட (1996-2001) காலக்கட்டத்தில் அந்நாட்டுப் பெண்கள் அனுபவித்த கொடுமைகளை சொல்லவே நா கூசும். பெண்களுக்கு மிக மோசமான இருண்ட காலங்களைப் பரிசாக அளித்தார்கள். பெண்கள் தலை முதல் கால் பாதம் வரை தங்களது ஆடைகளால் மறைக்க வேண்டும். ஆண் துணையில்லாமல் எங்கேயும் வெளியே செல்லக் கூடாது. சிறுமிகள் பாடசாலை செல்லக் கூடாது. மிக மிக முக்கியமாக அவர்கள் வீட்டு வேலை மட்டும் தான் செய்ய வேண்டும். சிறுமிகள் முதல் கைம்பெண்கள் வரை போகப் பொருளாகவே பார்க்கப்பட்டனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை