Skip to main content

கோவாவில் ஆகஸ்ட் 2 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

Jul 26, 2021 178 views Posted By : YarlSri TV
Image

கோவாவில் ஆகஸ்ட் 2 வரை ஊரடங்கு நீட்டிப்பு! 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. இதனால் மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன.



கோவாவில் கடந்த 24 மணி நேரத்தில் 75 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,70,491ஆக உயர்ந்துள்ளது. மாநிலம் முழுவதும் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1,158  ஆக உள்ளது. 



இந்நிலையில், கோவாவில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போது அமலில் உள்ள ஊரடங்கை ஆகஸ்ட் 2-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.



ஊரடங்கு காலத்தில் கடைகள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்படும் என முதல் மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

11 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை