Skip to main content

உலக சுகாதார அமைப்பால் கொரோனா வைரஸ் தோற்றத்தை கண்டுபிடிக்க முடியாது - விஞ்ஞானிகள்

Jul 03, 2021 143 views Posted By : YarlSri TV
Image

உலக சுகாதார அமைப்பால் கொரோனா வைரஸ் தோற்றத்தை கண்டுபிடிக்க முடியாது - விஞ்ஞானிகள் 

உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்டது.



அதன் பின் பெரும்பாலான நாடுகளுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்றும் ஆய்வகத்தில் இருந்து வெளியேறி உள்ளது என்றும் சீனா மீது அமெரிக்கா குற்றம் சாட்டியது.



மேலும் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டு உண்மைகளை மறைப்பதாகவும் அமெரிக்கா கூறியது. ஆனால் அதை சீனா திட்டவட்டமாக மறுத்து கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது என்று தெரிவித்தது.



ஆனால் அமெரிக்கா கொடுத்த நெருக்கடி காரணமாக கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து கண்டுபிடிக்க உலக சுகாதார அமைப்பு தனது நிபுணர் குழுவை சீனாவுக்கு அனுப்பியது.



அவர்கள் சீனாவின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். வைரஸ் வவ்வால்களிடம் இருந்து பரவி இருக்கலாம் என்ற அடிப்படையிலும் ஆய்வு செய்தனர். மேலும் வூகான் ஆய்வகத்திலும் விசாரனை செய்தனர்.



கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்று நிபுணர் குழு தெரிவித்தது. இந்த நிபுணர் குழு தனது ஆய்வறிக்கையை உலக சுகாதார அமைப்பிடம் அளித்துள்ளது.



இதற்கிடையே கொரோனா தோற்றம் குறித்து கண்டறிய அடுத்த கட்ட ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பால் கொரோனா வைரஸ் தோற்றத்தை கண்டுபிடிக்க முடியாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.



இதுகுறித்து உலக சுகாதார அமைப்புடன் நெருங்கிய தொடர்புடைய விஞ்ஞானிகள் கூறியதாவது:-



அமெரிக்கா- சீனா இடையே அரசியல் பதற்றங்கள் நிலவி வரும் சூழ்நிலை காரணமாக கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து நம்பகமான விடைகளை உலக சுகாதார அமைப்பால் கண்டுபிடிப்பது என்பது சாத்தியமற்றது.



இது உலக சுகாதார அமைப்பின் பணியில்லை. எனவே இந்த விசாரனையை உலக சுகாதார அமைப்பு மேற்கொள்ளக்கூடாது.



இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை