Skip to main content

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்டுக்குள் முழுமையாக வெளியேறும்!

Jul 03, 2021 132 views Posted By : YarlSri TV
Image

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்டுக்குள் முழுமையாக வெளியேறும்! 

அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது தாக்குதல் நடத்திய அல்-கொய்தா அமைப்புக்கு அடைக்கலம் கொடுத்த ஆப்கானிஸ்தான் மீது 2001-ம் ஆண்டு அமெரிக்கா போர் தொடுத்தது. அங்கு ஆட்சியில் இருந்த தலிபான்கள் விரட்டப்பட்டனர்.



ஆனால் ஆப்கானிஸ்தானின் அரசுக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் உள்நாட்டு போர் ஏற்பட்டது. இதையடுத்து நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது.



இதற்கிடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்க அரசுக்கும், தலிபானுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட் டது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக திரும்ப பெறப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.



அமெரிக்காவில் புதிய அதிபராக பதவி ஏற்ற ஜோபைடன் கூறும்போது ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் 2021-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதிக்குள் திரும்ப பெறப்படும் என்று தெரிவித்தார்.



இப்பணி முழுவீச்சில் நடந்து வந்த நிலையில் பக்ராம் விமானப்படை தளத்தில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. இந்த விமானப்படை தளம் ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய விமானப்படை தளம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.



20 ஆண்டுகளுக்குபிறகு அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியுள்ளன. இதனால் சில நாட்களில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறலாம் என்று தகவல் வெளியானது.



இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்டு மாத இறுதிக்குள் முழுமையாக வெளியேறும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.



இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜன்சாகி கூறியதாவது:-



ஆப்கானிஸ்தானில் பக்ராம் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று நேட்டோ படையினர் வெளியேறினர். அமெரிக்க படைகள் முழுமையாக ஆகஸ்டு மாத இறுதியில் வெளியேறும் என்றார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை