Skip to main content

பிரிட்டனில் ஜூலை 19ல் ஊரடங்கு முடிவுக்கு வருகிறது -சுகாதாரத் துறை மந்திரி தகவல்

Jun 23, 2021 139 views Posted By : YarlSri TV
Image

பிரிட்டனில் ஜூலை 19ல் ஊரடங்கு முடிவுக்கு வருகிறது -சுகாதாரத் துறை மந்திரி தகவல் 

பிரிட்டனில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. நேற்று புதிதாக 10633 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது, 5 பேர் உயிரிழந்துள்ளனர். 



தற்போதுள்ள நிலையில் பாதிப்பு குறைந்தால் ஜூலை 19ம் தேதி அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வரும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியிருந்தார். அதேசமயம் கடுமையான குளிர்காலம் வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.



கொரோனா பாதிப்பினால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் திருப்தி அளிப்பதாக இருப்பதால், ஜூலை 19 ஆம் தேதி அனைத்து கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கான பாதையில் பிரிட்டன் பயணிக்கிறது என சுகாதாரத்துறை மந்திரி மாட் ஹான்காக் தெரிவித்தார்.



நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், குறிப்பாக அடுத்த வாரத்தின் துவக்கத்தில் உள்ள நிலவரத்தை பார்த்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை