Skip to main content

சர்வதேச யோகா தினம் - நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

Jun 21, 2021 169 views Posted By : YarlSri TV
Image

சர்வதேச யோகா தினம் - நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு! 

உடலுக்கும், உள்ளத்துக்கும் ஆரோக்கியம் சேர்க்கும் அரிய கலை யோகா. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றிய இந்த கலை, இப்போது உலகமெங்கும் பரவி இருக்கிறது. உடல், உள்ளம், உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் இந்த கலையை உலகமெங்கும் பரப்பும் நோக்கத்தில் பிரதமர் மோடி ஐ.நா. பொதுசபையில் 2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி பேசினார்.



அதைத் தொடர்ந்து உலக நாடுகளின் ஒருமித்த ஆதரவுடன் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினத்தை கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. முதல் சர்வதேச யோகா தினம் 2015-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி கொண்டாடப்பட்டது.



இதற்கிடையே, ஏழாவது சர்வதேச யோகா தினம் உலகமெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பொது இடங்களில் பிரபலங்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் யோகா பயிற்சியில் ஈடுபடுவது வழக்கமாகி உள்ளது.



இந்நிலையில், அமெரிக்காவில் இந்தியாவின் துணைத் தூதரகம், நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் சர்வதேச யோகா கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டது. 'சங்கராந்தி' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 3,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை