Skip to main content

சரத் பவார் வீட்டில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்.. அரசியல் சந்திப்பு இல்லையாம்

Jun 23, 2021 156 views Posted By : YarlSri TV
Image

சரத் பவார் வீட்டில் நடந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்.. அரசியல் சந்திப்பு இல்லையாம் 

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் வீட்டில் நேற்று ஆம் ஆத்மி உள்பட 8 கட்சி தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது. இது அரசியல் சந்திப்பு இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.



டெல்லியில் நேற்று முன்தினம் சரத் பவாரும், பிரசாந்த் கிஷோரும் சந்தித்து நீண்ட ஆலோசனை நடத்தினர். இதனை தொடர்ந்து, 2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தர பிரதேச தேர்தலிலும் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டு போராட்டத்தை ஆய்வு செய்ய, சரத் பவார் மற்றும் யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் சார்பாக 22ம் தேதி (நேற்று) நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு பல எதிர்க்கட்சி தலைவர்களுக்கு நேற்றுமுன்தினம் அழைப்பு அனுப்பப்பட்டது.



திட்டமிட்டப்படி, நேற்று சரத் பவார் வீட்டில் எதிர்க்கட்சி தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது. தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தேசிய மாநாடு ஆகிய 8 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தும் அந்த கட்சியிலிருந்து எந்தவொரு தலைவர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.



இந்த சந்திப்பு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலோட்பால் பாசு கூறுகையில், இது ஒரு அரசியல் சந்திப்பு அல்ல. ஆனால் ஒத்த எண்ணம் கொண்டவர்களிடையே ஒரு தொடர்பு. கோவிட் மேலாண்மை, அரசு அமைப்புகள் மீதான தாக்குதல் மற்றும் வேலையின்மை போன்ற பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது என்று தெரிவித்தார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தரப்பிலிருந்து யாரும் கலந்து கொள்ளாதது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை