Skip to main content

இன்று கருப்பு தினம் அனுசரிப்பு... 6 மாதத்தை கடந்த விவசாயிகள் போராட்டம்!

May 26, 2021 193 views Posted By : YarlSri TV
Image

இன்று கருப்பு தினம் அனுசரிப்பு... 6 மாதத்தை கடந்த விவசாயிகள் போராட்டம்! 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஆண்டு நவம்பர் 26ம் தேதி முதல் டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் போராட்டம் தொடங்கி இன்றுடன் 6 மாதம் ஆகிறது. இந்த தினத்தை கருப்பு நாளாக அனுசரித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 



போராட்டத்தின் 6 மாதம் நிறைவடைந்ததையொட்டி, விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தலாம் என தகவல் வெளியானது. குறிப்பாக டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணியாக செல்லலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதனால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி-அரியானா எல்லையான சிங்கு எல்லையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, விவசாயிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன.



நாடு முழுவதும் விவசாய பெருமக்கள் தங்கள் வீடுகள், கடைகள், டிராக்டர்கள் மற்றும் மற்ற வாகனங்களில் கருப்புக் கொடிகளை ஏற்றி வைத்து, வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும்படி விவசாய சங்க தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 



போராட்டம் மற்றும் தர்ணா நடைபெறும் இடங்களில் இருந்து கிராமங்களுக்கு கொரோனா பரவும் அபாயம் இருப்பதால், விவசாயிகள் தங்கள் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என அரியானா முதல்வர் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை