Skip to main content

பிரான்சை துரத்தும் கொரோனா - 52 லட்சத்தை தாண்டியது பாதிப்பு!

Apr 17, 2021 162 views Posted By : YarlSri TV
Image

பிரான்சை துரத்தும் கொரோனா - 52 லட்சத்தை தாண்டியது பாதிப்பு! 

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும் உள்ளது.



  உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் பிரான்ஸ் தற்போது 4-வது இடத்தில் நீடிக்கிறது.



இந்நிலையில், பிரான்ஸ் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 36 ஆயிரத்து 442 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 52 லட்சத்து 24 ஆயிரத்து 321 ஆக உள்ளது.



ஒரே நாளில் 313 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,00,404 ஆக உயர்ந்துள்ளது.



மேலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்துள்ளது. சுமார் 10.77 லட்சத்துக்கு அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை