Skip to main content

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்களுக்கு ரத்தம் உறைதல் பிரச்னை!

Mar 31, 2021 197 views Posted By : YarlSri TV
Image

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்களுக்கு ரத்தம் உறைதல் பிரச்னை! 

ஜெர்மனியில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்களில் பலருக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டுள்ளதை அடுத்து 60 வயதிற்கும் கீழ் உள்ளவர்களுக்கான தடுப்பூசி பயன்பாட்டை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. ஜெர்மனியில் தினசரி தொற்று 13 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், நாடு முழுவதும் ஆஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டு 60 வயதிற்கும் கீழ் உள்ள 30க்கும் மேற்பட்டவர்களுக்கு ரத்தம் உறைதல் பிரச்னை ஏற்பட்டிருப்பதும் அதில் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதும் ஜெர்மனி சுகாதாரத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



இதுகுறித்து ஜெர்மனி சுகாதார அமைச்சர் ஜீன்ஸ் பான்ஸ் தெரிவித்ததாவது, நமது நாட்டில் பயன்படுத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி மருந்து குறிப்பிட்ட வயதினரிடையே பிரச்சனையை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று, கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 31 பேருக்கு உடலில் ரத்த உறைதல் கண்டறியப்பட்டது. அதில் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர். அதிகளவில் பெண்களுக்கும், 60 வயதுக்கும் குறைவான சில ஆண்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என குறிப்பிட்டார். இதையடுத்து 60 வயதிற்கும் கீழ் உள்ளவர்களுக்கான கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை கட்டுப்படுத்த ஜெர்மனி அரசு முடிவு செய்துள்ளது. இதனிடையே பிரேசிலில் சில நாட்களாக குறைந்திருந்த கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.



அங்கு ஒரேநாளில் 86, 704 பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருக்கின்றனர். 24 மணி நேரத்தில் 3668 பேர் உயிரிழந்துவிட்டதால் மொத்த பலி எண்ணிக்கை 3 லட்சத்து 18 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா காட்டுத்தீயாக பரவி வருவதால் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் அட்டவணையில் பிரேசில் 2ம் இடத்தில் உள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், துருக்கி, இத்தாலி, போலந்து, அர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை